நான் என்ன பிட்சயா எடுக்கிறேன் தொழில் தானே செய்கிறேன் – தமிழ் சினிமாவின் பிரபல குழந்தை நட்சத்திரம் வேதனை.

0
1124
bharath
- Advertisement -

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் போன்றவர்கள் நடித்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் சீரியலில் ரசிகர்கள் மனதை கவர்ந்த குழந்தை நட்சத்திரமாக இருந்தவர் தான் நடிகர் பரத். இவர் தற்போது சினிமாவை நடப்பதை விட்டுவிட்டு தனியாக ஐஸ்கீரிம் டிரக் ஓன்று நடத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் தான் பிரபலமான செய்தி ஊடகம் ஓன்று இவரிடம் பேட்டி எடுத்திருந்தது.

-விளம்பரம்-

சினிமா :

நான் குழந்தை நான்காவது படிக்கும் போது இங்கிலீஷ்காரன் படத்தில் சரத்குமார் அவர்களுடன் இணைந்து நடித்த பின்னர் சொர்க்கம் “சீரியலில்” என்ற சிரியலில் நடித்தேன். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் நான் விஷ்கம் கல்லூரியில் படித்தேன் அதற்குப் பிறகு தொழில் தான் என்று என்பதில் உறுதியாக இருந்தேன். சினிமா துறையை பொறுத்தவரை நாம் எப்போது உயரத்திற்கு செல்வோம் எப்போது கீழே வருவோம் என்று யாருக்குமே தெரியாது.

- Advertisement -

தொழில் தொடங்க காரணம் :

சினிமாவை மட்டும் நம்பி இருக்க வேண்டாம் என்று தொழிலையும் செய்ய முடிவெடுத்தேன். சில விளம்பரங்களிலும் நடித்திருக்கிறேன் அதற்கு பிறகு என்ன தொழில் செய்யலாம் எண்டு நினைத்து கொண்டிருந்த போது ஐஸ் கிரீம் தொழிலை தொடங்க்குவதற்கு வாய்ப்பு கிடைத்து. எனக்கு இந்த எண்ணம் சிறிய வயதில் இருந்தே இருந்தது. கார்ட்டூன் தொடர்களில் நான் பார்த்திருகிறேன் ஆனால் நிஜத்தில் அதிகமாக பார்க்கவில்லை என யோசித்து இந்த தொழிலை தொடங்கினேன்.

தொழிலில் பல சவால்கள் :

எனக்கு பிடித்த தொழிலை செய்வதினால் எனக்கு போர் அடிக்காது. எனவே, என்னுடைய நண்பர்களுடன் கலந்துரையாடி நான் ஏன் விதவிதமாக இருக்கும் கூல்ரிங்க்ஸை இந்த தொழிலை தொடங்க ஆரம்பித்தேன். சென்னயில் அதிகமான அளவு ஐஸ்கீரிம் கடைகள் இருக்கின்றன எனவே நான் ஐஸ்கீரிம் டிரக் ஆரம்பிக்க முடிவு செய்தேன். இந்த தொழிலை தொடங்கியவுடன் பல சவால்கள் வந்தது ஆனால் அவற்றையெல்லாம் எதிர்கொண்ட பிறகு தான் என்னால் இந்த தொழிலில் வெற்றி காண முடிந்தது என கூறினார்.

-விளம்பரம்-

மீண்டும் சினிமாவிற்கு வருவேன் :

குழந்தை நட்சத்திரமாக இருந்தால் சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் ஆனால் நான் பெரிதாக சினிமா பாக்கம் போக வில்லை. அதோடு பெரிதாக எனக்கு சினிமா பின்புலம் கிடையாது எனவே சினிமாவில் மீண்டும் நுழைவது கடினம் என தோன்றியது அதனால் தான் இந்த தொழிலை தேர்ந்தெடுத்தேன். இந்த தொழில் சிறப்பாக நடக்கும் பட்சத்தில் நான் மீண்டும் சினிமாவிற்கு செல்வேன்.சினிமாவில் நடிப்பதற்கு வயது வரம்பு கிடையாது அடிக்கத் தெரிந்தால் போதும் எனக்கு நடிப்பும் நல்ல கதாபாத்திரமும் முக்கியம் அப்படி ஒரு சிறப்பான கதாபாத்திரம் கிடைத்தால் இன்னும் ஐந்து வருடங்களில் கண்டிப்பாக நடிப்பேன் என்று நினைக்கிறேன் எனக்கு கூறினார்.

நான் என்ன பிச்சை எடுக்கிறேனா ? :

சினிமா துறையில் எனக்கு பெரிய அளவில் எனக்கு வாய்ப்பு வரவில்லை. சில குறும்படங்களில் நடிப்பதற்கு கேட்டார்கள் ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை ஆகும் என்பதால் என்னால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. இப்போது என்னுடைய தொழிலில் தான் நான் முழு கவனம் செலுத்தியிருக்கிறேன் பல சேனல்கள் என்னிடம் பேட்டி எடுக்க வரும்போது அவர்களுடைய youtube சேனல் இவரின் நிலைமையை பார்த்தீர்களா என்று போடுவார்கள். நான் என்ன பிட்சயா எடுக்கிறேன் தொழில் தானே செய்கிறேன். ஏன் அதை தொழில் சாதிக்கும் நடிகர் எனப் போட்டால் நன்றாக இருக்கும் என தோன்றும். ஆனால் அது அவர்களுடைய விருப்பம் அவர்கள் பார்வையாளருக்காக வைக்கின்றனர் அதை ஒன்றும் சொல்ல முடியாது.

அம்மாவின் இழப்பு :

பின்னர் தன்னுடைய தாய் பற்றி கூறிய நடிகர் பரத் எனக்கு அனைத்துமே என்னுடைய அம்மா தான். அவர்கள் சொன்னால் நான் மறுப்பு சொல்லவே மாட்டேன். ஆனால் அவர்கள் சமீபத்தில் தவறி விட்டார். அவர்க்ளின் இழப்பில் இறுத்து வெளியில் வருவதற்கு எனக்கு 2 முதல் 3 மாதங்கள் வரையில் ஆனது. என்னுடைய உறவினர்கள் என்னை நானே பார்த்துக்கொள்ளும் அவர் வந்தவுடன் தான் என்னை விட்டு சென்றனர். அவர்களின் நினைவு மீண்டும் வராமல் இருக்கத்தான் தொழில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

பல தவறுகள் செய்தேன் :

தொடக்கத்தில் பல தவறுகள் செய்துதான் இந்த தொழிலை கற்றுக் கொண்டேன். பல முயற்சிகள் சில சமயங்களில் ஒண்டுமில்லாமல் போனது. நான் நல்லவர் என்று நினைத்து ஒருவரை என்னுடைய தொழிலில் சேர்த்த போது பின்னர் தான் தெரிய வந்தது அவரைப் பற்றி எனவே அவரிடமிருந்து நான் விலகி விட்டேன். ஒருவேளை அவரிடம் இன்னும் கொஞ்ச நாட்கள் பயணித்து இருந்தால் என்னுடைய தொழிலை மொத்தமாக மொத்தமாக இழந்திருக்க நேரிடும் என்று அவர் அந்த பேட்டியில் கூறினார்.

Advertisement