வானத்தை போல,friends படத்தில் நடித்த சிறுவனின் தற்போதைய நிலை – வாய்ப்புகளுக்கு காத்துகொண்டு இல்லாமல் வாழ்க்கையில் சாதித்த நடிகர்.

0
348
Bharath Jayanth
- Advertisement -

தமிழ் சினிமாவில் விஜய்,அஜித் போன்றவர்கள் நடித்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் சீரியலில் ரசிகர்கள் மனதை கவர்ந்த குழந்தை நட்சத்திரமாக இருந்தவர் தான் நடிகர் பரத். இவர் தற்போது சினிமாவை நடப்பதை விட்டுவிட்டு தனியாக ஐஸ்கீரிம் டிரக் ஓன்று நடத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் தான் பிரபலமான செய்தி ஊடகம் ஓன்று இவரிடம் பேட்டி எடுத்திருந்தது.

-விளம்பரம்-

நான் குழந்தை நட்சத்திரமாக பல சீரியல்களிலும், படங்களிலும் நடித்திருக்கின்றேன, அதற்கு பிறகு காலேஜ் செல்ல ஆரம்பித்த பிறகு சினிமா மட்டுமே தொழிலாக இருக்க கூடாது என்று யோசித்து ஆரம்பித்ததுதான் இந்த தொழில். இந்த தொழிலை வைத்துக்கொண்டே மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடலாம் என்று நினைத்தேன் அதற்கு பிறகு MBA படிப்பை முடித்தேன். அதற்கு பிறகு விளம்பர நிறுவனத்தில் நான்கு வருடங்கள் வேலை செய்தேன்.

- Advertisement -

அதற்கு பிறகு “இமைக்கா நொடியில்” படத்தில் இயக்குனர் அஜய் கண்னமுத் அவர்களுடன் பார்ட் டைமாக வேலை செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது. அங்கு சில காலம் தான் வேலை செய்தேன். அதற்கு பிறகுதான் இந்த ஐஸ் கிரீம் தொழிலை தொடங்க்குவதற்கு வாய்ப்பு கிடைத்து. எனக்கு இந்த எண்ணம் சிறிய வயதில் இருந்தே இருந்தது. கார்ட்டூன் தொடர்களில் நான் பார்த்திருகிறேன் ஆனால் நிஜத்தில் அதிகமாக பார்க்கவில்லை என யோசித்து இந்த தொழிலை தொடங்கினேன்.

எனக்கு சினிமாவில் பின்புலம் கிடையாது :

என்னுடைய நண்பர்களுடன் கலந்துரையாடி இந்த தொழிலை தொடங்க ஆரம்பித்தேன். சென்னயில் அதிகமான அளவு ஐஸ்கீரிம் கடைகள் இருக்கின்றன எனவே நான் ஐஸ்கீரிம் டிரக் ஆரம்பிக்க முடிவு செய்தேன். அது மற்றவர்களை ஈர்க்கும் என நம்பினேன். குழந்தை நட்சத்திரமாக இருந்தால் சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் ஆனால் நான் பெரிதாக சினிமா பாக்கம் போக வில்லை. அதோடு பெரிதாக எனக்கு சினிமா பின்புலம் கிடையாது எனவே சினிமாவில் மீண்டும் நுழைவது கடினம் என தோன்றியது அதன் காரணமாகத்தான். இந்த ஐஸ்க்ரீம் டிரக் தொழிலை தொடங்கலாம் என்று ஆரம்பித்தோம். ஒரு வேலை சினிமாவில் முயற்ச்சி செய்திருந்தால் கண்டிப்பாக வாய்ப்பு கிடைத்திருந்திருக்கும் இந்த தொழிலுக்கு வந்திருக்க மாட்டேன் என்று கூறினார்.

-விளம்பரம்-

சினிமாவில் அறிமுகம் :

சகலகலா பூம் பூம் சீரியல் :

நான் மறக்க முடியாத நபர்கள் என்னுடைய சினிமா வாழக்கையில் பார்த்திருக்கிறேன். சகலகலா பூம் பூம் சிரியலில் மூலம் தான் நான் அதிக விஷியங்களை கற்றுக்கொண்டேன். அதிலிருந்து ஓன்று தோன்றியது வித்தியாசமாக அதாவது செய்தால் அது மக்களுக்கு செல்கிறது என்று. அந்த சீரியலின் மூலம் தான் எனக்கு இந்த ஐஸ்கீரிம் டிரக் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

பள்ளி வாழ்க்கை :

நான் சிறுவயதில் பள்ளிகளுக்கு அதிகமாக சென்றதே இல்லை அதிகப்பசம் 6,7,8 வகுப்புகளில் 3 மாதம் தான் சென்றிருப்பேன். அப்போது சிபிஎஸ்சி பாடப்பிரிவு இருந்தது. எனவே சினிமாவும் பார்த்துக்கொண்டு படிப்பையும் தொடர முடியாது என்று ஆசிரியர் ஒருவர் ஆழ்வார் பேட்டில் உள்ள MVTM என்ற பள்ளியை பரிந்துரை செய்தார். அங்கே சென்றால் அந்த பள்ளியுடைய தலைமை ஆசிரியர் என்னுடைய ரசிகர். எனவே அந்த பள்ளியில் படிப்பது கொஞ்சம் எளிதாக இருந்தது. அதிகபட்சமாக 2 நாட்கள் மட்டும்தான் அதுவும் பரீட்சையின் போதுதான் சென்டிருட்பேன். எனவே என்னுடைய பள்ளியில் உள்ள நண்பர்களுக்கு அதிகமாக தெரியாது. அதோடு என்னை சக மாண்வர்களாகத்தான் அவர்கள் பார்த்தார்கள். அதிகாட்சம் என்ன நடந்து, எந்த சீரியல் என்று கேட்பார்கள் அவ்வளவுதான். மற்றபடி சாதாரண பள்ளி மாணவர்களளாகத்தான் என்னுடைய பள்ளி வாழ்க்கை சென்றது.

Advertisement