கன்னட நடிகர்களிடம் இருந்து என்னை காப்பற்றுங்கள்.! கதறும் பிரெண்ட்ஸ் பட நடிகை.!

0
10000
Vijayalakshmi

தமிழில் விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியானது பிரண்ட்ஸ் திரைப்படம். இந்த படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். இவர் சென்னையில் பிறந்து கர்நாடகாவில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து அங்கேயே நடிக்க ஆரம்பித்தார். பெரும்பாலும் கன்னட படங்களில் நடித்த விஜயலட்சுமி சில சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். 

This image has an empty alt attribute; its file name is ravi-prakash.jpg

கடந்த சில ஆண்டுகளாக சீரியலில் கூட வாய்ப்பில்லாமல் இருந்து வந்தது. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானார் விஜயலக்ஷ்மி. இந்த நிலையில் இவர் தற்பொழுது உயர் ரத்த அழுத்தம் காரணமாக தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருந்த பணத்தை அம்மாவின் மருத்துவ செலவிற்காக செலவாகிவிட்டதால்துதனது சிகிச்சைக்காக சினிமா துறையினர் உதவவேண்டும் என அவர் சகோதரி கேட்டிருந்தார்.

இதையும் பாருங்க : நீச்சல் குளத்தில் அமலா பாலுடன் போஸ் கொடுத்த ரம்யா.! இவங்களையும் கெடுத்துட்டாங்களா.! 

- Advertisement -

இதனால் பல்வேறு நடிகர்கள் விஜயலட்சுமியை சந்தித்து உதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனைக்குச் சென்று, விஜயலட்சுமியிடம் நலம் விசாரித்துவிட்டு, ரூ.1 லட்சம் உதவி செய்தார் கன்னட நடிகர் ரவி பிரகாஷ் . ஆனால், அவர் மீது போலீசில் புகார் அளித்திருந்தார் விஜயலக்ஷ்மி.

ஆனால், தமிழ் பெண் என்பதால் இவரை கன்னட போலீஸ் மிகவும் கேவலமாக நடத்துகின்றனராம். சமீபத்தில் இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ள விஜயலக்ஷ்மி. நான் மருத்துமனையில் இருந்த போது நடிகர் ரவி பிரகாஷ் எனக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவி செய்தார். உதவி செய்து விட்டு என்னிடம் அவர் தவறாக நடக்க முயற்சி செய்தால் அவர் மீது போலீசில் வழக்கு பதிவு செய்தேன்.

-விளம்பரம்-

ஆனால், போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இப்போது நான் வீடுகூட இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன். நான் தமிழ் பெண் என்பதால் என்னை மிகவும் கஷ்டப்படுகிறார்கள். போலீசில் புகார் அளிக்கச் சென்றால் அவர்களும் கன்னடத்தில் எழுதி தரும்படி என்னை கஷ்டத்துக்கு உள்ளாகுகிறார்கள். நான் மீண்டும் சென்னைக்கு திரும்ப வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நான் பட்ட கடனை அடக்க ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும் அதற்கு தமிழ் திரையுலகம் உதவி செய்ய வேண்டும். எனக்கு உதவுங்கள் என்று மிகவும் உருக்கமுடன் கூறியுள்ளார் விஜயலட்சுமி

Advertisement