ஆமா, இப்போது நான் பிச்சைக்காரிதான், எனக்கு உதவுங்க – நடிகை விஜயலட்சுமியின் பரிதாப நிலைமை. வீடியோ இதோ.

0
3987
vijaya
- Advertisement -

இப்போது நான் பிச்சைக்காரியாக தான் இருக்கிறேன். யாராவது உதவுங்கள் என்று நடிகை விஜயலட்சுமி பேட்டி அளித்தார். தற்போது இது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் விஜயலட்சுமி. இவர் 1997 ஆம் ஆண்டு நாகமண்டலம் என்ற கன்னடப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் தமிழில் பிரண்ட்ஸ், பூந்தோட்டம், மிலிட்டரி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

-விளம்பரம்-

இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் கன்னடம், மலையாளம் தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் பெங்களூரில் உள்ளார். மேலும், சில ஆண்டுகளாகவே சோசியல் மீடியாவில் இவரைப் பற்றி பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் தான் உள்ளன. அதுமட்டுமில்லாமல் தனக்கு பிரச்சனை இருப்பதால் சமூக வலைத்தளங்களில் உதவி செய்யுங்கள் என்றும் இவர் வீடியோ போட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பின் விஜயலட்சுமி தன் அம்மா, அக்கா உடன் பெங்களூரில் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். சமீபத்தில் இவர் அம்மா இறந்துவிட்டார். அப்போது அவருக்கு நெருக்கமான நண்பர்கள் தான் உதவி செய்துள்ளார்கள்.

- Advertisement -

மேலும், என்னை பிச்சைக்காரி, பைத்தியக்காரி என எப்படி நினைத்தாலும் பரவாயில்லை. எனக்கு உதவுங்கள் என்று இவர் கூறி உள்ளதை பார்த்து பலரும் அவருக்கு நிதி உதவி அளித்துள்ளனர். இதுவரை அவருடைய கணக்கில் கிட்டத்தட்ட ஏழு லட்சம் ரூபாய் வரை சேர்ந்துள்ளது. இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி கர்நாடக சினிமா வர்த்தக சபையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து உள்ளார். அப்போது அவர் கூறியது, என் தாய் இறந்த உடன் எனக்கு என்ன செய்வது என்று எனக்கு சுத்தமாக புரியவில்லை. பாமா, ஹரிஸ் தான் எனக்கு அந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவினார்கள். எனக்கு அழுவதை தவிர வேறு எதுவும் செய்ய தெரியவில்லை. கர்நாடகாவில் நான் பிச்சைக்காரியாக தான் இருக்கிறேன்.

எல்லாவற்றுக்கும் நான் பிச்சை எடுத்து இருக்கிறேன். எனக்கு பண உதவி செய்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி சொல்கிறேன். என் அக்கா பல்வேறு பிரச்சினைகளுடன் உள்ளார். நான்தான் கவனிக்க வேண்டிய சூழலில் உள்ளேன். அம்மா இறந்த உடன் எனக்கு அந்த பொறுப்பு வந்து விட்டது. இப்போது எனக்கு என்று யாருமே இல்லை. நான் சென்னைக்கு போக மாட்டேன் இங்கே தான் பெங்களூரிலேயே இருக்கப் போகிறேன். இந்த சந்திப்பின் மூலம் பத்திரிகையாளர்கள் எனக்கு உதவ வேண்டும் என்று பரிதாபத்துடன் மன்றாடி கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement