21 ஆண்டுக்கு முன் KBC நிகழ்ச்சியில் 1 கோடி வென்ற சிறுவனா இன்று இப்படி இருப்பது. என்ன பண்ணுறாரு தெரியுமா? வைரல் புகைப்படம்.

0
578
ravimohan
- Advertisement -

இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் அமிதாபச்சன். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அதோடு இவர் இன்றும் இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆகவே கலக்கி கொண்டு இருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் என பன்முகம் கொண்டு இருக்கிறார். அந்த வகையில் அமிதாப் பச்சன் அவர்கள் ஹிந்தியில் கவுன் பனேகா குரோர்பதி எனும் கோடீஸ்வர நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்த மாணவர் ஒருவர் தற்போது போர்பந்தரில் காவல் அதிகாரியாக பதவி வகித்திருக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. 2001 ஆம் ஆண்டு ஹிந்தியில் நடைபெற்ற இந்த கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் கலந்து கொண்டிருந்தார்.

- Advertisement -

கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் 1 கோடி வென்ற சிறுவன்:

அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து கடைசியாக கேட்க 15வது கேள்விக்கும் அந்த சிறுவன் பதிலளித்து ஒரு கோடி ரூபாய் பரிசை வென்றார். நிகழ்ச்சி விதியின்படி போட்டிக்கு பங்கு பெரும் நபர் 18 வயது இருந்தால் மட்டுமே பணத்தை தருவார்கள். இதனால் அந்த சிறுவனுக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு 69 லட்சம் ரூபாய் வரி விலக்கு படி பணம் கிடைத்தது. இந்த சிறுவனின் பெயர் ரவி மோகன் சைனிங். தற்போது இவர் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்.

ரவி மோகன் சைனி படிப்பு:

இவருடைய தந்தை Lieutenant Mohanlal Saini அவர்கள் கடற்படை அதிகாரியாக இருந்தார். ரவி மோகன் சைனி தன் பள்ளிப்படிப்பை முழுவதும் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள நேவல் பப்ளிக் பள்ளியில் தான் படித்தார். பின்னர் ஜெய்ப்பூரில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தார். ஒரு கடற்படை அதிகாரியாக தன்னுடைய தந்தை செய்த சேவையை பார்த்து வளர்ந்தார் ரவி. பின் ரவி எம்பிபிஎஸ் படிப்பை முடித்த பிறகு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்விற்கு தயாரானார்.

-விளம்பரம்-

யுபிஎஸ்சி தேர்வில் வென்ற ரவி மோகன் சைனி:

2013 இல் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 461 ஆவது இடத்தை மூன்றாவது முயற்சியில் பிடித்து காவல்துறை பணியில் பதவியைப் பெற்றார். இதற்கு முன் ரவி இந்திய அஞ்சல் மற்றும் தொலைதொடர்பு கணக்குகள் மற்றும் நிதி சேவைகளில் இருந்தார். மேலும், ரவி சைனி ஆரம்பத்தில் ராஜ்கோட் நகரில் துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். பின்னர் போர்பந்தருக்கு மாற்றப்பட்டார். மே 2020ல் இவர் காவல் கண்காணிப்பாளராக மாவட்டத்தின் பொறுப்பேற்றார்.

போலீஸ் அதிகாரியாக கலக்கும் ரவி:

கடமையில் உறுதியாக இருந்து பணியாற்றி வருகிறார். சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது தான் முதன்மை கடமை என்று செயல்பட்டு வருகிறார் ரவி. தற்போது இந்த எஸ்பியின் சிறுவயது புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது .இதை பார்த்த பலரும் அந்த சிறுவன் அப்போதே படிப்பில் கெட்டிக்காரனாக இருந்து ஒரு கோடியை வென்றார். தற்போது காவல் அதிகாரியாக கலக்கிக் கொண்டு வருகிறார் என்றும் கூறி வருகிறார்கள். மேலும், இவருடைய புகைப்படத்தை சோசியல் மீடியால் பகிர்ந்து வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்.

Advertisement