ஹன்சிகா முதல், பூஜா ஹெக்டே வரை Social Media-வில் மதுவை விளம்பரப்படுத்தும் முன்னணி நடிகைகள் – கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
140
actress
- Advertisement -

முன்னணி நடிகைகள் மதுவை விற்பனை செய்யும் விளம்பரத்தில் இறங்கி இருப்பதால் ரசிகர்கள் பயங்கர கழுவி ஊற்றி வருகிறார்கள். பொதுவாகவே நடிகைகள் அழகு சாதன பொருட்கள், துணிகள், நகைகள், உணவு பொருட்கள் என பல விளம்பரங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வந்தார்கள். ஆனால், தற்போது நடிகைகள் மது விற்பனை செய்யும் விளம்பரங்களில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும், நடிகைகள் இப்படி மது விற்பனையில் இறங்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

சமீப காலமாக நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல பொருட்களை விளம்பரம் செய்து காசு பார்த்து வருகின்றனர். இதில் சில தரமற்ற பொருள்களை நடிகைகள் விற்பதன் மூலம் பல பிரச்சினைகள் இருந்தது. இதனால் சில மாதங்களுக்கு முன்பு மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்தது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் இதையெல்லாம் தாண்டி ஒரு படி போய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக திகழும் பூஜா ஹெக்டே, ராய்லட்சுமி, ஹன்சிகா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் தங்களுடைய இன்ஸ்டா பக்கத்தில் மது விளம்பரத்தை சர்வ சாதாரணமாக செய்து இருக்கிறார்கள்.

- Advertisement -

பூஜா ஹெக்டே:

தளபதி விஜயின் பீஸ்ட் படத்தில் ஹீரோயினியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இதனிடையே இவர் விஸ்கியை விளம்பரப்படுத்தும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் இது ரொம்ப தப்பு புட்டபொம்மா என்று கமென்ட் போட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

ராய் லட்சுமி:

விஸ்கியுடன் ராய் லக்‌ஷ்மி

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் கவர்ச்சி நடிகையாக கலக்கியவர் ராய்லட்சுமி. இவர் சமீப காலமாகவே கவர்ச்சி பாடல்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்போது இவர் ஜப்பான் நாட்டின் டோக்கியோ விஸ்கியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரப்படுத்தி இருக்கிறார். டோக்கியோ என்றால் ஜப்பான் மொழியில் நேரம் என்று பொருள். மேலும், இதற்கு ராய் விளக்கம் கொடுத்து படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பயங்கரமாக ராய் லட்சுமியை கழுவி ஊற்றி வருகிறார்கள்.

ஹன்சிகா மோத்வானி:

இந்த மது விளம்பரத்தில் ஹன்சிகாவும் இறங்கியிருக்கிறார். இதைப் பார்த்து ‘நீயும் மா’ என்று ரசிகர்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள். நடிகை ஹன்சிகா அவர்கள் ராய் விளம்பரம் செய்த அதே டோக்கியோ விஸ்கியை விளம்பரம் செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு சியர்ஸ் என்று சொல்லியிருக்கிறார்.

ஹன்சிகாவின் விளம்பரம்

காஜல் அகர்வால் :

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் காஜல் அகர்வாலும் இதற்கு விதிவிலக்கல்ல. கடந்த ஆண்டு திருமணம் முடித்த இவர் சமீபத்தில் தான் தல தீபாவளியை கொண்டாடினார். தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்னர் சரக்கு பாட்டிலுடன் தன் கணவருடன் புகைப்படம் ஒன்றை பதிவிட்ட காஜல், இந்த பண்டிகையை இந்த பானத்துடன் கொண்டாடுங்கள். இது சிறப்பான தீபாவளி கம்பெனி, பொறுப்புடன் குடியுங்கள் , இந்த பதிவு 25 வயதுக்கு மேற்பட்டோருக்கு தான் என்று பதிவிட்டு இருந்தார்.

இப்படி நடிகைகள் சர்வ சாதாரணமாக உணவுடன் மதுவையும் இணைத்து அருந்துங்கள் என விளம்பரப்படுத்துவது தவறான விஷயம் என்று ரசிகர்களும், நெட்டிசன்களும் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் பல இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது என்றும் கூறிவருகின்றனர்.

Advertisement