இயக்குனரான மீசையை முறுக்கு பட நடிகர். கதாநாயகியான ஜி வி பிரகாஷின் தங்கை.

0
8288
ananth
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்களின் அக்கா மகன் ஆவார். எஸ். சங்கரின் தயாரிப்பிலும் வசந்தபாலன் இயக்கத்திலும் வெளிவந்த வெயில் படத்தின் மூலம் தான் இவர் இசையமைப்பாளராக சினிமா உலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருடைய பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் தன்னுடைய இசை திறமையை வெளிப்படுத்தி வந்தார். இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், நடிகர் எனப் பன்முகங்கள் கொண்டவர்.

-விளம்பரம்-
Image

ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவான ஜென்டில்மேன் படத்தின் மூலம் தான் ஒரு பாடகனாக இவர் காலடி வைத்தார். இதனைத் தொடர்ந்து இவர் 2008 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த குசேலன் படத்தில் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். இவர் தலைவா, டார்லிங், பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, நாச்சியார்புரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் சர்வம் தாளமயம் என்ற படத்திலும் நடித்து உள்ளார்.

- Advertisement -

மேலும், இவர் பாலிவுட் படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ஜி வி பிரகாஷின் தங்கை பவானி அவர்கள் படத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது இவருக்கு முதல் படம். இந்த படத்தில் கதாநாயகனாக ஆனந்த் ராம் நடிக்கிறார். 2017 ஆம் ஆண்டு ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த படம் மீசைய முறுக்கு. இந்த படம் இசை பின்னணியை கொண்ட காதல் திரைப்படம்.

இந்த படத்தில் ஆதி,விவேக் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க ஆதியின் சொந்த கதை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தில் ஆதியின் தம்பியாக அஸ்வின் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆனந்த் ராம். தற்போது நடிகர் ஆனந்த் ராம் தான் இந்த புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். மேலும், ஜி.வி. பிரகாஷின் தங்கையும், ஹிப் ஹாப் தமிழா ஆதி, ஆனந்த் இவர்கள் மூவரும் இருக்கும் புகைப்படம் ஒன்று இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தில் ஹிப் ஹாப் ஆதி இருக்கிறாரா? என்றும் கேட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement