சுந்தரி- கண்ணம்மா நடித்திருக்கும் N4 படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சின்னத்திரையின் பிளாக் பியூட்டிகளாக ஜொலித்துக் கொண்டிருப்பவர்கள் கேப்ரில்லா மற்றும் வினிஷா தேவி. இவர்கள் இருவருமே டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்கள். கேப்ரில்லா மக்கள் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி இருந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பலருக்கும் பரிட்சயமானார்.
அதற்கு பிறகு இவர் எண்ணற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தார். அதுமட்டுமில்லாமல் பல ஷார்ட் பிலிம்களில் கூட கேப்ரில்லா நடித்திருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் ஐரா. இந்த திரைப்படத்தில் சிறுவயது நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் கேப்ரில்லா. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.
கேப்ரில்லா குறித்த தகவல்:
தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் கேப்ரில்லா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருக்கிறார். மேலும், டி.ஆர்.பியில் சுந்தரி சீரியல் கலக்கி கொண்டிருக்கிறது. அதற்கு கேப்ரில்லாவின் நடிப்பு மிக முக்கியமான காரணம் என்றே கூறலாம். அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட் கொடுத்த பாரதி கண்ணம்மா சீரியலில் புது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து இருந்தார்.
வினுஷா தேவி குறித்த தகவல்:
டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் இருந்தது. சமீபத்தில் தான் இந்த சீசன் முடிவடைந்தது. இதனை அடுத்து தற்போது புது கதைகளத்துடன் பாரதி கண்ணம்மா 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணமாவாக வினுஷா தேவி நடித்த வருகிறார். இப்படி இருவருமே சின்ன திரையில் நாயகிகளாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இருவரும் சேர்ந்து நடித்து இருக்கும் N4 படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வைரலாகி வருகிறது.
N4 படம்:
கேப்ரில்லா-வினுஷா இருவரும் இணைந்து கதாநாயகியாக N4 என்ற படத்தில் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தில் இவர்கள் இருவரும் மீனவர் பெண்ணாக நடித்து இருக்கின்றார்கள். இவர்களுடன் மைக்கல், தர்மதுரை, அனுபமா குமார், அபிஷேக் சங்கர், வடிவுக்கரசி, அழகு என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க காசிமேடு பகுதியில் வாழும் மீனவர்களின் வாழ்வியலை சொல்லும் படமாக எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் குமார் இயக்கியிருக்கிறார்.
N4 படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ:
இந்த படத்தை நவீன் சர்மா தயாரித்திருக்கிறார். மேலும், இந்த படம் ஏற்கனவே உருவாகிவிட்டது. ஆனால், வெளியீடு தான் தள்ளிக்கொண்டே சென்றது. இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து ஸ்னீக் பீக் காட்சிகள் என்று சொல்லப்படும் இரண்டு நிமிட காட்சி வீடியோ வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.