விஜய் இப்படி செய்தது அவ்ளோ எரிச்சலா இருக்கு, இதெல்லாம் ஒரு வாழ்க்கையா – மேடையில் புலம்பிய கங்கை அமரன்.

0
389
vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இசையமைப்பாளராக திகழ்பவர் கங்கை அமரன். இவர் இசையமைப்பாளர் மட்டும் இல்லாமல் பாடகராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் என பன்முகம் கொண்டு வலம் வருகிறார். இவர் தமிழ் சினிமா உலகில் புகழ் பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகர் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி ஆகியோரின் தந்தையும் ஆவார். ஆரம்பத்தில் கங்கை அமரன் சினிமா உலகில் தன்னுடைய மூத்த சகோதரர் இளையராஜாவுடன் இணைந்து தான் பணியாற்றியிருந்தார். பின் தொழில்ரீதியாக இளையராஜாவுக்கும், கங்கை அமரனுக்கு மனக்கசப்பு ஏற்பட்டதால் இருவரும் தனித்தனியாக பிரிந்து தங்களுடைய திரைப் பயணத்தை தொடங்கினார்கள்.

-விளம்பரம்-

இவர் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த கோழிகூவுது என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டக்காரன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. இப்படி பன்முக திறமைகளை கொண்ட கங்கை அமரன் தற்போதும் திரைப்படங்களில் பல்வேறு விஷயங்களை செய்து தான் வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கங்கை அமரன் கலந்து கொண்டிருந்தார்.

- Advertisement -

விஜய் குறித்து கங்கை அமரன் சொன்னது:

அதில் அவர் நடிகர் விஜய் குறித்து பேசி இருக்கும் விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பது, விஜய் தனது அப்பா, அம்மாவை தள்ளிவைத்தது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நாங்கள் எல்லாம் எப்போதும் SAC நாடகத்திற்கு வாசித்தவர்கள். நான் ஓப்பனாக சொல்கிறேன், எனக்கு ஒன்னும் பயம் இல்லை. நாங்கள் எல்லாம் பெரியவர்கள். விமர்சனங்களை சொல்லத்தான் செய்வோம். SACயின் நாடகத்திற்கு வாசித்தபோது விஜய் குழந்தை. அப்போதெல்லாம் நாங்கள் அவரை கொஞ்சிட்டு போவோம்.

விஜய்- எஸ்ஏ.சந்திரசேகர் குறித்து கங்கை அமரன் கூறியது:

விஜய் எப்படி வளர்த்தார்கள் என்பதை பக்கத்திலிருந்து பார்த்த்தால் எனக்கு செய்தியை கேட்டதும் அவ்வளவு எரிச்சலாக இருந்தது என்று கூறியிருந்தார். இப்படி கங்கை அமரன், விஜய் பற்றி மேடையில் புலம்பிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய். தளபதி விஜய்க்கு அவருடைய பெற்றோருக்கும் கடந்த சில வருடங்களாகவே கருத்து வேறுபாடு இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. விஜய் அரசியலுக்கு வருவதாக சர்ச்சைக்குரிய வார்த்தைகளை அவருடைய தந்தையும், நடிகரும் இயக்குனருமான சந்திரசேகர் கூறியதை அடுத்து விஜய் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

-விளம்பரம்-

விஜய்- எஸ்ஏ சந்திரசேகர் இடையே கருத்து வேறுபாடு:

அப்போதிலிருந்து விஜய்க்கும் எஸ்ஏ சந்திரசேகருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சில ஆண்டுகள் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை என்றும் கூறப்பட்டது. அதிலும் தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் ரசிகர் தொடர்பாக நபர்கள் போட்டியிடுவதற்கு விஜய் கண்டித்து போட்டியிட்ட நபர்கள் மீதும் தன் தாய், தந்தை மீதும் புகார் அளித்திருந்தார். இது அப்போது சோஷியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தந்தை எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் தாயார் ஷோபா இருவரும் விஜய் வீட்டிற்கு வருவதில்லை என்றும் விஜயுடன் பேசுவதில்லை என்றும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் கூட விஜய் தன் தாயார் சோபாவை சந்தித்து இருக்கிறார் என்ற தகவல் வந்து இருந்தது.

பீஸ்ட் படம் பற்றிய தகவல்:

இது ஒரு பக்கம் இருக்க, மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சன் இயக்கி நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். மேலும், இந்த பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement