பருத்தி வீரன் விவகாரம் சிவகுமார் குடும்பத்தை நார் நாராக கிழித்த கஞ்சா கருப்பு. வைரலாகும் வீடியோ.

0
223
kangaKaruppu
- Advertisement -

தற்போது சோசியல் மீடியா முழுவதும் அமீர்-ஞானவேல் ராஜா சர்ச்சை தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழில் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகியிருந்த படம் பருத்திவீரன். இந்த படத்தில் ப்ரியாமணி, பொன்வண்ணன், சரவணன், கஞ்சா கருப்பு, சரவணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்த படத்திற்கு தேசிய விருது, மாநில விருது என பல விருதுகள் கிடைத்திருந்தது.

-விளம்பரம்-

இப்படி இருக்கும் நிலையில் 16 ஆண்டுகளாக புகைந்து கொண்டிருந்த அமீர்- ஞானவேல் ராஜா உடைய பிரச்சனை தற்போது பூதாகரமாக வெடித்து இருக்கிறது. சமீபத்தில் அளித்த பேட்டியில் அமீர், ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை யாரும் அழைக்கவில்லை. அதனால் நானும் போகவில்லை. பருத்திவீரன் படத்தின் வெற்றியால் தான் கார்த்திக் இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறார். சிவக்குமார், சூர்யா, கார்த்திக் குடும்பத்துடன் எனக்கு நெருக்கமான பழக்கம் இருந்தது. ஆனால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் எங்களுடைய நட்பை கெடுத்து விட்டார்.

- Advertisement -

பருத்திவீரன் சர்ச்சை:

அவரால் எனக்கு இரண்டு கோடிக்கும் மேல் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டது. அதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் காரணம் என்று கூறி இருந்தார். இதன் பின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அமீர் என்னிடம் பல லட்சங்கள் கடன் வாங்கி இருக்கிறார். அதனை கொடுக்க முடியாமல் தான் பருத்திவீரன் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் அவர் இயக்கி கொடுப்பதாக சொன்னார். சுமார் 2 கோடி பட்ஜெட்டில் ஃபர்ஸ்ட் காபி தருவதாக சொல்லிவிட்டு இரண்டு வருடங்களில் 4 கோடி வரை செலவு செய்தார். என்னை மட்டும் இல்லாமல் இன்னும் சில தயாரிப்பாளர்களிடமும் பணம் வாங்கிக் கொண்டு அமீர் மோசடி செய்து இருக்கிறார். அமீர் ஒரு திருடன் என்று விமர்சித்து கூறியிருக்கிறார்.

கஞ்சா கருப்பு பேட்டி:

இப்படி கோலிவுட் வட்டாரத்திலேயே அமீரின் விவகாரம் தான் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருக்கும் நிலையில் கார்த்திக், சூர்யா இருவருமே அமைதி காப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. பின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்கள் அமீரிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதோடு பலரும் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பருத்திவீரன் படத்தில் டக்ளஸ் கதாபாத்திரத்தில் நடித்த கஞ்சா கருப்பு கூறியிருப்பது, தமிழ்நாட்டில் கார்த்தியை யாருக்கு தான் தெரியும்? அமீர் படத்தின் முலம் தான் அவரை எல்லோருக்கும் தெரியும். 30 நாட்கள் வெயிலிலும், மழையிலும் நிற்க வைத்து அந்த கேரக்டரை அமீர் உருவாக்கி இருந்தார்.

-விளம்பரம்-

அமீர் குறித்து சொன்னது:

பருத்திவீரன் படத்தில் வந்த அத்தனை கதாபாத்திரமும் ஞானவேல் ராஜாவை நம்பியா வந்தார்கள் ?அமீர்காக தான் வந்தார்கள். பருத்திவீரன் படத்தால் எந்த ஒரு வகையில் நஷ்டம் என சொல்கிறீர்கள்? அமீர் தன் நண்பர்கள், தெரிந்தவர்கள் தான் படம் கொடுத்து உதவியிருக்கிறார்கள். உனக்கு அறிவு வேண்டாமா? நீ தானே படம் எடுத்தா? என்னால் படம் பண்ண முடியவில்லை, தப்பா நினைக்காதீங்க என்று சொல்லிவிட்டு சென்றிருக்கலாமே? ஏன் செய்யவில்லை அமீர்? எப்படி அமீர் பொய் கணக்கு காட்டப் போகிறார். ரம்ஜான் நோன்பு காலத்தில் கூட அவர் படபிடிப்பில் இருந்தார். இப்படி இருக்கும் போது ஒரு இஸ்லாமியர் எப்படி பொய் சொல்லுவார்? அமிரிடம் கார்த்தியை சிவகுமார் ஒப்படைத்தது உண்மைதான்.

கார்த்தி குறித்து சொன்னது:

இன்னைக்கு கார்த்தி, சூர்யா எல்லாம் எத்தனை கோடி சம்பளம் வாங்குகிறார்கள். அதில் ஒரு கோடி கொடுக்க வேண்டியது தானே? அவர்கள் பேசி இந்த பிரச்சனை முடிக்க வேண்டியதுதானே? அப்படி இருந்தால் பிரச்சனை வளர்ந்து இருக்குமா? இன்னைக்கு கார்த்தி ஏதேனும் நிகழ்ச்சிக்கு போனா, என்ன மாமா சௌக்கியமா? என்று தான் சொல்கிறார். அதை உருவாக்கியது யார்? அமிர்தான். இந்த படத்தை உருவாக்க சசிகுமாரும் பணம் கொடுத்தார். மேலும், அமீர் எப்பவும் என்னை விட்டுக் கொடுக்கவே மாட்டார். நான் அவருக்கு கால் செருப்பாக தான் இன்றைக்கும் இருப்பேன். பருத்திவீரன் படத்தை பெரிய படமாக மாற்றினார். கார்த்தியை அந்த படம் மாதிரி ஒரு படம் பண்ண சொல்லுங்கள். நான் சினிமாவை விட்டு போகிறேன் என்று கோபமாக கொந்தளித்து பேசி இருக்கிறார்.

Advertisement