சூரியின் கருடன் படத்திற்கு ப்ளூ சட்டை கொடுத்த விமர்சனம் – என்ன சொல்லி இருக்காரு பாருங்களே

0
219
- Advertisement -

சூரியின் கருடன் படம் பற்றி ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டிருக்கும் விமர்சனம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூரி. விடுதலை படத்தின் மூலம் இவர் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார். தற்போது இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் கருடன். இந்த படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், மைம் கோபி, ஆர் வி உதயகுமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி இருக்கிறார். படத்தில் ஒரு கிராமத்தில் அமைச்சர் ஒருவர் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை தனக்கு சொந்தமாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறார். ஆனால், அந்த இடத்தின் உடைய மூல பத்திரம் கோயில் டிரஸ்ட் இடம் இருக்கிறது. அவர் அந்தப் பத்திரத்தை எப்படியாவது கைப்பற்றி தன்வசம் ஆக்க பல திட்டங்கள் போடுகிறார். இன்னொரு பக்கம் அதே ஊரில் சசிகுமார், உன்னி முகுந்தன் என இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.

- Advertisement -

கருடன் படம்:

இருவருமே இணைபிரியாத நட்புடன் இருக்கிறார்கள். உன்னியின் நிழலாகவும், அவருக்கு விசுவாசமாக இருப்பவர் தான் சொக்கன் சூரி. மேலும், அமைச்சர் போடும் திட்டத்தை இந்த இரண்டு நண்பர்கள் முறி அடித்தார்களா? இதில் சூரியின் பங்கு என்ன? அமைச்சர் ஏன் அந்த நிலத்தை அடையப் பார்க்கிறார்? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் சூரி, சொக்கன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதை விட சொக்கன் ஆகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம்.

படத்தின் கதை:

மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் கருடன் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், இந்த மாதிரியான கதைகளை நாம் நிறைய பார்த்து விட்டோம். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று நம்மாலே யூகிக்க முடியும். குறிப்பாக படத்தினுடைய கிளைமாக்ஸ் காட்சி இதுதான் என்று எல்லோருமே யூகிக்க கூடிய அளவிற்கு இருக்கிறது. படத்தில் நிறைய ட்விஸ்ட்டர் இருந்தது. ஆனால், அதில் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

-விளம்பரம்-

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:

நாலு நண்பர்கள் அவர்களுக்கு ஒரு காதலி என்று படத்தை கொண்டு செல்லாமல் இயக்குனர் ஒரே நேர்கோட்டில் கொண்டு சென்றிருப்பது சிறப்பு. அதோடு படத்தில் மூன்று ஹீரோக்கள் என்பதால் யாரை ஃபாலோ செய்ய வேண்டும், யாருக்கு முக்கியத்துவம் என்பதை இயக்குனர் தெளிவாக காண்பித்திருக்கிறார். இடைவெளிக்கு பிறகு வரும் காட்சிகள் நன்றாக இருக்கிறது. சில காட்சிகள் காந்தாரப் படத்தினுடைய ஃபீல் கொடுத்தாலும் ரசிக்கும்படி இருந்தது.

படம் குறித்த விமர்சனம்:

கிளைமாக்ஸுக்கு முன்பு சூரி சில சம்பவங்களை செய்திருப்பார். அது நன்றாக இருக்கும். மொத்தத்தில் இந்த படத்தில் சில குறைகள் இருந்தாலும் இன்னும் கொஞ்சம் இயக்குனர் சுவாரசியத்தை கொடுத்திருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும். ஒருமுறை இந்த படத்தை பார்க்கலாம். கருடன் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் தான். கடந்த ஆறு மாசமாக குப்பை படத்தை எல்லாம் வெளியிட்டு நம்மை சாகடித்து இருந்தார்கள். இந்த படம் ரொம்ப நல்லா இருக்கு என்று கூறியிருக்கிறார்.

Advertisement