ஜெய்யை தொடர்ந்து பெயரை மாற்றிய நெடுஞ்சாலை பட நடிகர் ஆரி. காரணம் இது தானாம்.

0
4265
Aari
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி வளர்ந்து வருபவர் நடிகர் ஆரி. இவர் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான ‘ரெட்டைசுழி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நடிகராக அறிமுகமானர். இதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு கிருஷ்ணா இயக்கத்தில் நெடுஞ்சாலை என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் தான் நடிகர் ஆரி மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். இதனைத் தொடர்ந்து மாலை பொழுதின் மயக்கத்திலே, மாயா, உன்னோடு கா, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
Related image

- Advertisement -

தற்போது நடிகர் ஆரி அவர்கள் ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான், அலேகா, மௌனவலை போன்ற படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் லண்டனை சேர்ந்த இலங்கை தமிழ் பெண்ணாக நதியாவை காதலித்து சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். நடிகர் ஆரி அவர்கள் தற்போது அவருடைய பெயரை “ஆரி அர்ஜுனா” என்று மாற்றியிருக்கிறார். இந்த பெயர் மாற்றம் குறித்து அவரிடம் கேட்ட போது அவர் கூறியது, “நான் சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமல் இன்று வரை பயணிக்கிறேன்.

அதற்கு காரணம் நீங்கள் என் மேல் வைத்த நம்பிக்கையும், அன்பும் தான். அதை நான் என்றும் வீணாக்கமாட்டேன். சினிமா உலகில் ஆரி, ஆரியா, ஆதி என ஒரே உச்சரிப்பில் சில ஹீரோக்களின் பெயர்கள் இருப்பதால் சின்ன குழப்பம் ஏற்பட்டு வருகிறது என்று கூறுகிறார்கள். அதனால் தான் இந்த மாற்றத்தை நான் செய்து உள்ளேன். இந்த புத்தாண்டு முதல் எனது பெயரை மாற்றி உள்ளேன். ஆரி அருஜூனா என்ற பெயரிலேயே இனி வரும் காலங்களில் என்னை அழைக்கலாம் என்று கூறினார். தற்போது இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகின்றது

-விளம்பரம்-
Related image

மேலும், நடிகர் ஆரி அவர்கள் சினிமா தவிர சென்னை வெள்ளம்,ஜல்லிக்கட்டு பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை போன்ற அனைத்து சமுதாய பிரச்சனைக்கும் முன்னின்று குரல் கொடுத்தவர். அதுமட்டும் இல்லாமல் இவர் கடந்த சில ஆண்டுகளாக மாறுவோம் மாற்றுவோம் என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவி வருகிறார். அந்த அறக்கட்டளையில் விவசாயம் குறித்த விழிப்புணர்வுகளை மேற் கொண்டு வருகிறார் ஆரி. இதற்காக நடிகர் ஆரி அவர்கள் கின்னஸ் புத்தகத்தில் கூட இடம் பிடித்தார்.

Image result for nedunchalai  aiswarya dutta

தற்போது நடிகர் ஆரி அவர்கள் பிக்பாஸ் மூலம் புகழ் பெற்ற நடிகை ஐஸ்வர்யா தத்தாவுடன் இணைந்து நடிக்கும் படத்திற்கான படப்பிடிப்புகள் மும்முரமாக போய் கொண்டு உள்ளது. இன்னும் பெயர் அறிவிக்கப்படாத இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மிக வித்தியாசமாக டிக்டோக் செயலின் நடன பதிவு மூலம் வெளியிட்டனர் பட குழுவினர். அதோடு இப்படி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு ஐடியாவை வைத்து படத்திற்கான மார்க்கெட்டிங் செய்வது இதுவே முதல் முறை.

Advertisement