தல – தளபதி சந்திப்பால் மீம் மெட்டிரியலாக மாறிய கெளதம் கம்பீர் – வச்சி செய்யும் ரசிகர்கள்.

0
1553
gambir
- Advertisement -

தமிழ் சினிமாவில் தளபதி என்று அழைக்கப்படும் விஜய்யை கிரிக்கெட்டில் தலை என்று அழைக்கப்படும் தோனி நேரில் சந்தித்து உரையாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை தொடர்ந்து கௌதம் கம்பீரின் மீம்ஸ்களும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில் துவங்கிய 14வது ஐபிஎல் தொடரானது வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா தொற்று காரணமாக 21 போட்டிகள் முடிவடைந்த நிலையில் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் செப்டெம்பர் மாதத்தில் நடைபெறும் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது.அதன்படி துபாயில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் போட்டியில் விளையாடும் என்று அறிவித்திருந்தது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் Csk அணி வீரர்கள் பலரும் சென்னை வர துவங்கினர். அந்த வகையில் சென்னை அணியில் முதல் நபராக தோனி கடந்த சில நாட்களுக்கு முன் தனது குடும்பத்துடன் சென்னை வந்தடைந்தார்.இப்படி ஒரு நிலையில் தோனி விஜய்யை பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து அவருடன் கேரவனில் சிறிது நேரம் உரையாடி இருக்கிறார் அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தல ரசிகர்கள் அஜித் தான் உணமையான தல என்று ஒருபுறம் #ஒரேதலஅஜித் என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்டிங் செய்து கொண்டு இருக்க தற்போது தோனி – விஜய் சந்திப்போடு ஒப்பிட்டு இந்திய அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீரை கலாய்த்து பல விதமான மீம்கள் சமூக வலைதளத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

கடந்த சில வருடங்களாக தோனி குறித்து கெளதம் கம்பீர் தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். பலமுறை தோனியின் மீதுள்ள அதிருப்தி காரணமாக எப்போதுமே அவருக்கு எதிர்மறையாகவே தனது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அதனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியும் உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் தொடரில் பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கௌதம் கம்பீர் ட்வீட் ஒன்றை போட்டு இருந்தார் “இந்திய கிரிக்கெட் அணி 1983, 2007, 2011 ஆகிய ஆண்டுகளில் பெற்ற உலக கோப்பையை விட பெரியது என பதிவிட்டு இருந்தார். இதிலும் அவர் தோனியை தான் தாக்கி பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement