“பிக்பாஸ் புகழ்” ஓவியாவுடன் கவுதம் கார்த்திக் இணையும் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’

0
1426
oviya

சென்னை: தமிழக இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னி பிக்பாஸ் புகழ் ஓவியாவும் கவுதம் கார்த்திக்கும் இணைந்து இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற படத்தில் நடிக்க உள்ளனர்.

தமிழக திரையுலகில் களவானி,புலிவால் போன்ற படங்களில் நடித்த ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துவிட்டனர்.

- Advertisement -

பிக்பாஸ் போட்டியிலிருந்து ஓவியா வெளியேறினாலும் இன்றுவரை அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது எனலாம்.
oviya1

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தானாக விருப்பப்பட்டு வெறியேறிய ஓவியா மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதில்லை என்று முடிவெடுத்துள்ளார்.

-விளம்பரம்-

ஓவியாவ விட்டா யாரு

ஓவியா ஏற்கனவே நடித்து திரைக்கு வர தயாராகவுள்ள “ஓவியாவ விட்டா யாரு” படம் ரிலீஸாக தயாராக உள்ளது. ஓவியா ஆர்மியை மனதில் வைத்தே படத்தின் தலைப்பு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் படக்குழுவினரால் மாற்றப்பட்டுள்ளது.

oviya2

கவுதம் கார்த்திக்

இந்நிலையில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி உள்ளிட்டோர் நடித்துள்ள அடல்ட் காமெடி படம் ஹரஹர மகாதேவகி படம் விரைவில் மெர்சலுக்கு போட்டியாக திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை தயாரித்துள்ள தங்கம் சினிமாஸ் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து :-

ஹரஹர மகாதேவகி படத்தை தொடர்ந்து கவுதம் கார்த்திக்கை வைத்து இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற படத்தை எடுப்பதாக தயாரிப்பு நிறுவனம் தங்கம் சினிமாஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
goutham

கவுதம் கார்த்திக்

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் கவுதம் கார்த்திக் தான் ஹீரோ. அவருக்கு ஜோடியாக ஓவியாவை நடிக்க வைக்க முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். படத்தில் நடிக்க ஓவியாவும் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.
“பிக்பாஸ்”

Advertisement