85% கதைய கேட்டும் விஜய் ‘காக்க காக்க’ படத்த வேணான்னு சொல்டாரு அதுக்கு காரணம் இதான் – கௌதம் மேனன்.

0
3154
kakka
- Advertisement -

சூர்யாவின் திரை பயணத்தில் மைல்கல்லாக அமைந்த படம் காக்க காக்க. இந்த படம் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தில் சூர்யா, ஜோதிகா, ஜீவன், ரம்யா கிருஷ்ணன், டேனியல் பாலாஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் சூர்யா அவர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் வேற லெவல் தூள் கிளப்பி இருப்பார். இந்த படத்திற்கு முதலில் “பின்குறிப்பு” என்று தலைப்பு வைத்தர்கள். பின்குறிப்பு தலைப்புடன் போஸ்டரும் சோசியல் மீடியாவில் வெளிவந்தது. பின் சில காரணங்களால் அந்த படத்தின் தலைப்பு காக்க காக்க என்று மாற்றப்பட்டது.

-விளம்பரம்-
goutham menon vijayக்கான பட முடிவுகள்

இப்படி ஒரு நிலையில் காக்க காக்க படத்தின் சில சுவாரசியமான தகவல்களை கூறியுள்ளார் இயக்குனர் கௌதம் மேனன். அதில் பேசிய கௌதம் மேனன், நான் முதலில் இந்த கதையில் ஜோதிகாவிற்காக எழுதிவிட்டு நான் அவரிடம் இதைப் பற்றி பலமுறை சொன்னேன். அவர் தான் இந்த கதையில் அஜித் மற்றும் விக்ரம் ஆகிய யாராவது நடிக்கலாம் என்று என்னை அனுப்பி வைத்தார். ஆனால், சில பல காரணங்களால் அவர்களால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. அதன் பின்னர் ஜோதிகா என்னிடம் நந்தா படத்தை பார்க்க சொன்னார்.

இதையும் பாருங்க : நீச்சல் குலத்தில் புடவையை விளக்கி தர்ஷா குப்தா கொடுத்த போஸ் – வைரல் புகைப்பம்.

- Advertisement -

அந்த படத்தை பார்த்துவிட்டு சூர்யாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதன்பின்னர்தான் சூர்யா இந்த படத்தில் நடிக்க வந்தார் என்று கூறிய கௌதம் மேனன். மேலும், விஜய்யிடம் இந்த படத்தின் கதையை சொல்லியும் அவர் நிராகரித்த காரணம் குறித்து சொல்லியுள்ள கௌதம் மேனன், இந்தப் படத்தின் கதையை ஒரு ஒன்றரை ஆண்டுகள் என் மனதில் தயார் செய்து கொண்டேன். மேலும், ஒரு 80, 85 சதவீத கதையோடு தான் விஜயை சந்திக்க சென்று கதையை சொன்னேன். அதனால் தான் விஜய்க்கு இந்தப் படம் செட்டாகவில்லை. அவரோ எனக்கு இந்த படத்தின் முழு கதையை சொல்லுங்கள் என்றார்.

வீடியோவில் 13 நிமிடத்தில் பார்க்கவும்

எனக்கு க்ளைமாக்ஸ் கதை வேண்டும் என்று சொன்னார் நானும் படத்தை ஆரம்பித்துவிட்டு கிளைமாக்ஸ்ஸ சொல்லி விடுகிறேன் என்றேன். ஆனால், அவர் எனக்கு முழு கதையும் வேண்டும் என்று சொன்னார். அவர் அப்படித்தான் வேலை செய்வார் அதில் தவறு ஒன்றும் கிடையாது. ஆனால், இதுதான் நான் படம் எடுக்கும் விதம்..படத்தின் 90 சதவீதத்தை முடித்துவிட்டு அந்த கடைசி 10 சதவீதம் அந்த நடிகரை பொறுத்துதான் அமையும். அந்த கதாபாத்திரத்திற்காக அவர் என்ன செய்திருக்கிறார் ஒரு இயக்குனராக அவரை நான் எப்படி கையாண்டு இருக்கிறேன் என்பதையெல்லாம் வைத்து தான் அடுத்து முடிவுக்கு செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். மற்றவர்களுக்கு இது புரிவதில்லை, அதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால், என்னை நம்பி வந்தால் கண்டிப்பாக ஒரு மேஜிக் நடக்கும் என்று கூறியுள்ளார் கௌதம் மேனன்.

-விளம்பரம்-
Advertisement