தமிழ் சினிமா உலகில் காதல், ரொமான்டிக் படம் என்றாலே அது கௌதம் மேனன் தான். இவர் படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. அந்த அளவிற்கு இவருடைய படமெல்லாம் மிகப் பெரிய அளவு ஹிட். இவர் முதன் முதலாக விளம்பரப் பட இயக்குனராக தான் இருந்தார். அதற்கு பின் இயக்குனர் ராஜீவ் மேனனிடம் தான் உதவியாளராக இருந்தார். அதற்கு பிறகு தான் மின்னலே இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
அதன் பின்னர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா என்று பல்வேறு ஹிட் படங்களை இயக்கினார் கௌதம் மேனன். ஆனால், இன்றும் கௌதம் மேனன் கதாபாத்திரங்களில் கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸி கதாபாத்திரத்தை மறக்க முடியாது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு-த்ரிஷா நடிக்க கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா.
இந்த படம் ரிலீஸ் ஆன முதலில் பிளாப் படம் போல தோன்றினாலும் பின்னர் பார்க்கப் பார்க்க பிடிக்கும் என்பது போல காதலர்களின் படமானது அந்த படம். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கௌதம் மேனன், இந்த படத்தின் சில வசனத்தை சிம்பு எப்படி மாற்றினார் என்பதை கூறியுள்ளார். அதில், பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் உங்கள் படங்களில் ஏன் பெரும்பாலான வசனங்கள் ஆங்கிலத்தில் இருக்கிறது என்று.
அவ்வளவு ஏன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கூட ஆங்கிலத்தில் இருக்கும் வசனங்களை சிம்பு மிகவும் சிறப்பாக செய்திருப்பார். ஒரு குறிப்பிட்ட காட்சியில் ஒரு வசனம் வரும் அதில் ‘சத்தியம் பண்றது ஓடைக்கறதுக்கு தானே’ என்ற ஒரு வசனம் முதலில் நான் ஆங்கிலத்தில் தான் பேசச் சொன்னேன். ஆனால் சிம்பு தான் இந்த வசனத்தை தமிழில் பேசுகிறேன் என்று சொன்னார். நானும் அதற்கு ஓகே சொல்லிவிட்டேன் அந்த காட்சி மிகவும் நன்றாக வந்தது என்று கூறி இருக்கிறார் கவுதம் மேனன்.