தியேட்டரில் தோன்றிய காதல். முதன் முறையாக தனது காதல் குறித்து பேசியுள்ள கௌதம் மேனன்.

0
1825
Goutham-menon
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் கௌதம் மேனனும் ஒருவர். இவர் படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. ஏன்னா, அந்த அளவிற்கு அவருடைய படமெல்லாம் மிகப் பெரிய அளவு ஹிட். இவர் முதன் முதலாக விளம்பரப் பட இயக்குனராக தான் இருந்தார். இவர் முதன் முதலாக ராஜீவ் மேனனிடம் தான் உதவியாளராக இருந்தார். அதற்கு பிறகு தான் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இவர் திரைப்பட இயக்குனர், திரைக்கதையாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், ஒலிச்சேர்க்கை கலைஞர் என பல முகங்களை கொண்டவர். இவர் மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார்.

-விளம்பரம்-

பெரும்பாலும் இவருடைய படங்கள் எல்லாம் பெரிய அளவு பட்ஜெட் படங்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் கௌதம் மேனன் இயக்கிய “என்னை நோக்கி பாயும் தோட்டா” படம் நீண்டகால காத்திருப்புக்கு பிறகு வெளி வந்தது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் இவர் அனுஷ்கா, மாதவனை வைத்து “நிசப்தம்” என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது. இந்த படம் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார்கள். அதோடு இவர் மலையாளத்தில் ட்ரான்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் சமீபத்தில் நடந்த பேட்டியில் தன்னுடைய காதல் அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியது, நீங்கள் வாரணம் ஆயிரம் படம் பார்த்திருப்பீர்கள் அல்லவா, அதே மாதிரி தான் எங்களுடைய காதலும். அந்த படத்தில் காண்பிக்கப்பட்ட காதல் காட்சி எங்களுடைய வாழ்க்கையில் நடந்த காட்சி தான். நானும், அவங்களும் பல வருடங்களாக நட்பாக பழகி வந்தோம். ஒரு நாள் நாங்கள் இருவரும் பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்து இருந்தோம். என் ஃப்ரண்டு நினைத்து தான் நான் அவர்களுடன் பேசி கொண்டு இருந்தேன். ஆனால், அவங்க இது நட்பல்ல அதையும் தாண்டி ஒன்று என்று எனக்கு சொன்னாங்க.

மேலும், நான் முதலில் இருந்து உங்களை என்னுடைய காதலனாக தான் பார்க்கிறேன். ஆனால், நீங்க தான் என்னை பிரண்டா பார்த்தீங்க. இந்த நேரத்திலும் இதை பத்தி சொல்லலனா நம்ம ரிலேஷன்ஷிப் கடைசி வரை பிரெண்டாகவே போய் விடும் என்று சொன்னாங்க. அதுக்கு அப்புறம் நான் எதுவும் சொல்லல. ரெண்டு வருஷம் கழிச்சு தான் என்னுடைய காதலை நான் அவங்கக்கிட்ட சொன்னேன். ஏன்னா, சில பேர் கடைசி வரை ஃப்ரண்டாக இருப்பார்கள். நானும் அந்த மாதிரி தான் அவர்களை பார்த்தேன். ஆனால், அதெல்லாம் இல்லை என்று சொல்லும் போது என்னால அடுத்து ஸ்டேஜுக்கு போக முடியல.

-விளம்பரம்-
https://youtu.be/QgIL46oAxTU

நான் அவர்களை முழுக்க முழுக்க என்னுடைய நண்பராக தான் பார்த்தேன். அதுக்கப்புறம் அவங்க என்மேல வச்சிருக்கிற காதலை புரிந்து கொள்வதற்கு எனக்கு ரெண்டு வருஷம் தேவைப்பட்டது. அதுக்கப்புறம் ஒரு நாள் சினிமா தியேட்டரில் நாங்கள் படம் பார்த்துக் கொண்டு இருந்தோம். அப்ப தான் எனக்கு அவங்கள பாக்கும்போது இவங்க இல்லாமல் நம்முடைய வாழ்க்கை ஒன்னும் இல்லன்னு எனக்கு தோனுச்சு. அப்ப தான் நான் உன்னை காதலிக்கிறேன் என்று என்னுடைய காதலை அவர்களிடம் சொன்னேன் என்று கூறினார்.

Advertisement