என்னது நான் குடித்தேனா..!வதந்திகளை பரப்பாதீர்கள் தந்தி டிவி..!கொந்தளித்த காயத்ரி..!

0
244
gayathri

நேற்று முன்தினம் இரவு சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வீக் எண்ட் பார்ட்டி நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு திரும்பிய போது குடி போதையில் இருந்தார் என்று காவல் துறையினர் காயத்ரியை மடக்கி அபராதம் விதித்ததாக செய்திகள் வெளியானது.

மேலும், அரைமணி நேரம் போராட்டத்திற்கு பிறகு போதையில் இருந்த காயத்ரி ரகுராமை குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து ரூ.2,500 அபராதத்திற்கான ரசீதை கொடுத்தனர். பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டர், நீங்கள் கார் ஓட்ட வேண்டாம் என்று கூறி காவலரை காரை ஓட்டி சென்று வீட்டில் விட்டுவிட்டு வருமாறு உடன் அனுப்பியதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள நடிகை காயத்ரி ரகுராம், பிரபல தந்தி செய்தி நிறுவனத்தை குறை கூறியுள்ளார், இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், மீடியா எப்போதும் என்னை தான் குறி வைக்கிறது ஏன் என்று தெரியவில்லை.

என்னைபற்றி வதந்திகளை பரப்புவதற்கு முன்பு என்னிடம் கொஞ்சம் ஆலோசியுங்கள் @thanthi. நான் என்னுடைய வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் சாதாரண சோதனையை தான் காவலர்கள் செய்தார்கள். நான் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடவில்லை. என்னிடம் ஓட்டுனர் உரிமம், சார் சான்றிதழ் எதுவும் இல்லை அதை நான் வேறு பையில் வைத்துவிட்டேன். அந்த காவலர் என்னுடன் நன்றாக தான் நடந்து கொண்டார் இறுதியில் நாங்கள் இருவரும் செல்பி எடுத்துக்கொண்டோம்.நான் ஒருவேளை குடித்திருந்தால் என்னை எப்படி மீண்டும் காரை ஓட்டிச்செல்ல அனுமதிருப்பார்கள் என்று பதிவிட்டுள்ளார்.