சமீபத்தில் பாஜக கட்சியில் இருந்து காயதிரி ரகுமான் தர்க்காலிகமாக நீக்கப்பட்டதாக நிலையில் தற்போது பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று முழுவதுமாக பாஜகவை விட்டு வெளியேறி இருந்தார் காயத்ரி ரகுராம். பாஜக கட்சியில் கடந்த 8 வருடங்களாக பணியாற்றி வந்தவர் காயத்ரி ரகுராம். இவர் தமிழ் நாட்டில் மற்றும் அயல்நாட்டு தமிழ் வளர்ச்சி துறையில் தலைவராக இருந்து வந்தார்.இவர் பாஜக கட்சியின் தமிழ் வளர்ச்சி துறையின் தலைவராக இருந்தாலும் காசி தமிழ் சங்கம் உட்பட பல நிகழ்ச்சிகளில் இவரை பாஜக ஒதுக்குவதாக குற்றம் சாட்டி வந்தார். அதோடு தங்கள் கட்சியில் உள்ள மற்ற கட்சியினரின் உளவாளி என்பவர்களில் இவரது பெயர் பலமுறை அடிபட்டு வந்தது.

மேலும் சமீபத்தில் நடந்த சூர்யா மற்றும் டெய்ஸி ஆபாச சர்ச்சை விவகாரம் பற்றி காயதிரி ரகுராம் போட்டிருந்த பதிவினால் இவரை பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. பா ஜ கவில் இருந்து விலகிய நாளில் இருந்தே காயத்ரி ரகுராம் தொடர்ந்து பா ஜ க மூத்த தலைவர்கள் குறித்தும் பா ஜ க குறித்தும் விமர்சித்து பதிவுகளை போட்டு வருகிறார். அதே போல அண்ணாமலையை அடிக்கடி விமர்சித்து ட்வீட் போட்டு வருகிறார். இதனால் பா ஜ க ஆதரவாளர்கள் இவரை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தமிழக்த்தில் உள்ள பா ஜ க கட்டிடங்களை விமர்சித்து பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.

Advertisement

அதில் ’10 மாவட்டங்களில் பாஜக கட்டிடங்கள்.தமிழக பாஜகவுக்கு நிச்சயமாக உள்கட்டமைப்பில் (கட்டிடம் மட்டும்) வளர்ச்சி. ஆனால், அண்ணாமலை தலைமையில் உறுப்பினர்கள் வெளியேறுகிறார்கள். மதுரை எய்ம்ஸ் கட்டிடத்திற்கும் அதே முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என நம்புகிறேன், கூடிய விரைவில் கட்டப்படும் என நம்புகிறேன்.’ என்று பதிவிட்டு தேனி, திருவள்ளூர், விருதுநகர், தூத்துக்குடி, ஆகிய 10 ஊர்களில் இருக்கும் பாஜக அலுவலக கட்டிடங்களின் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

காயத்ரி ரகுராமின் இந்த பதிவிற்கு பதில் அளித்த பா ஜ கவை சேர்ந்த இசையமைப்பாளர் கங்கை அமரன் ‘ஏம்மா ? நீதான் கட்சிய பாடு பட்டு வளத்த மாதிரி பந்தா பண்றியே நீ டைரக்ட் பண்ணிருக்ர படமே ஒன்னால ஒழுங்கா பண்ணத்தெரியல ? நம்மள விட புத்திசாலிங்க கிட்ட பேசி மாட்டிக்காத இது நான் உங்ப்பாவோட ஒண்ணா வளந்த உன் சித்தபாங்கற முறையில சொல்றேன்’ என்று பதிலடி கொடுத்தார்.

Advertisement

இதற்கு காயத்ரி ரகுராம் ‘ஐயோ uncle நான் கட்சியை வளர்க்கவில்லை. என்னால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியாது. முதலில் கட்சி நமக்குள் வளர வேண்டும் ஆனால் அது என்னைப் பொருத்தவரை வளரத் தவறிவிட்டது. அதனால் தான் கட்சியை விட்டு வெளியேறினேன். நான் நல்ல இயக்குனராகவும் இல்லை, நான் பந்தா செய்ய பெரிய பிரபலம் இல்லை. நான் என் தந்தையைப் போல ஒரு உதவியாளர் மற்றும் ஒரு நல்ல உள்ளம் என்னிடம் உள்ளது.

Advertisement

அதே வழியில் நான் மக்களுக்கு உதவி செய்து பாதுகாத்தால் .. இது நான் நிறைவேற்றினால் அது எனக்கு மிகப்பெரிய சாதனை. I’m no one but I will be voice of many. அது அப்பா மீதான வாக்குறுதி. தயவு செய்து யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள் uncle.’நான் என் தந்தையைப் போல இருக்க என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். நான் என்ன செய்கிறேனோ அது சுத்தமாகவும் உண்மையாகவும் இருக்கும் என்று நம்பிகிறேன், அதுவே என் விருப்பம். எந்தத் துறையாக இருந்தாலும் என் தந்தை ஒரு தலைவராகப் பார்த்து வளர்ந்தேன். தங்க ஆன்மா.. உங்களுக்கு தெரியும் uncle என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement