பெண்களுக்குத் தான் பாதுகாப்பில்லை. பயணிகளுக்குமா? – மீண்டும் முருங்கை மரம் ஏறும் காயத்ரி ரகுராம்

0
395
- Advertisement -

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் காயதிரி ரகுராம் தற்போது மீண்டும் அண்ணாமலையை குற்றம் சாட்டி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.பாஜக கட்சியில் கடந்த 8 வருடங்களாக பணியாற்றி வந்தவர் காயத்ரி ரகுராம். இவர் தமிழ் நாடு மற்றும் அயல்நாட்டு தமிழ் வளர்ச்சி துறையில் தலைவராக இருந்து இவர் பாஜக கட்சியில் சேர்ந்ததில் இருந்து பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி வருகிறார்.

-விளம்பரம்-

சூர்யா – டெய்சி முதல் நேர்காணல் வரை :

சூர்யா – டெய்சி அடியோவினாலும் அலிஷா விவரகத்தினாலும் தற்க்கலிகமாக நீக்கப்பட்ட காயதிரி ரகுராம் கடந்த சில நாட்களுக்கும் முன்னர் முழுமையாக கட்சியில் இருந்து வெளியேறினார். இவர் வெளியேறியதில் இருந்து பல்வேறு செய்தி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். மேலும் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை பெண்களிடத்தில் தோற்று விட்டார். அண்ணாமலையுடன் நேர்காணலில் பேச வேண்டும். அவருக்கு என்னிடம் பேச தைரியம் இருக்கிறதா? என்று பதிவிட்டிருந்தார் காயதிரி ரகுராம்.

- Advertisement -

அண்ணாமலைக்கு நேரடி சவால் :

அதன் பிறகு சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலையுடன் போட்டியிட சவால் விடுகிறேன். உங்களின் போலி நாடகங்கள் விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். ஒருவேளை இந்த தேர்தலில் நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி தேர்தலை மாற்றலாம். நான் தமிழ் நாட்டின் மகள், நீ தமிழகத்தின் மகன். தமிழகமா? தமிழ்நாடா? என்று பார்த்து விடலாம் என்று பதிவிட்டிருந்தது சோசியல் மீடியாவில் வைரலாக நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையான ட்விட்டர் பதிவை போட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.

நேபாள விமான விபத்து :

இந்த டிசம்பர் 10ஆம் தேதி இண்டிகோ விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்றபோது விமானத்தில் இருந்த அவசர கதவை பாஜக எம் பி திறந்ததாகவும். அவருடன் பாஜக தலைவர் அண்ணாமலையும் பயணித்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த விஷியம் தொடர்பாக அண்ணாமலையை குற்றம் சாட்டினார் காயத்ரி. நேற்று நடந்த நேபாள விமான விபத்துக்கு பிறகு இது போன்ற நிகழ்வுகளுக்கு இண்டிகோ நிறுவனம் கருணை காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

-விளம்பரம்-

கடிதம் தொடுத்தால் போதுமா :

மேலும் பறக்க தயாராக இருக்கும் விமானத்தை பெரும் ஆபத்துக்கு தள்ளும் வகையில் குடிமகன் ஒருவர் செயல்பட்டால் அவரை கைது செய்து 2 ஆண்டுகள் வரையில் சிறையில் அடைக்க சட்டத்திற்கு உரிமை இருக்கிறது. மேலும் 100 பேர் சென்ற அந்த விமானத்தில் மற்றவர்க்ளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டுவிட்டு மன்னிப்பு கடிதம் மட்டும் கொடுத்தால் போதுமான என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் காயதிரி ரகுராம்.

பயணிகளுக்கும் பாதுகாப்பில்லை :

மேலும் அந்த மன்னிப்பு கடிதத்தை மறுக்கும் உரிமை சட்டப்படி அந்த நிறுவனத்திற்கு உள்ளது. கன்னட வளர்ப்பு மகன் சென்னை விமான நிலையத்தில் விளையாடுவதை வேடிக்கை பார்ப்பது வாரிசு அரசியலில் அலங்கோல முகம். மேலும் அவர் கூறுகையில் அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு மட்டும்தான் பாதுகாப்பில்லை என்று நினைத்தேன் ஆனால் இனி பயணிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை போலிருக்கிறது. எச்சடிக்கை காரியகர்த்தாக்கள் என்று அந்த தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காயதிரி ரகுராம்.

Advertisement