அண்ணாமலையை பாஜகவில் இருந்து நீக்க என்னிடம் ஆதாரம் இருக்கிறது – காயத்ரி கொடுத்த அதிர்ச்சி பேட்டி

0
541
- Advertisement -

தமிழக பாஜகவில் தமிழ் வளர்ச்சி துறை தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் சமீபத்தில் பாஜகவை விட்டு வெளியேறிய நிலையில் என்னால் தான் அண்ணாமலை பிரபலமடைகிறார் என்றும் அவரை கட்சியில் இருந்து நீக்க தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் குற்றசாட்டை வைத்துள்ளார் காயதிரி ரகுராம். பாஜக கட்சியில் கடந்த 8 வருடங்களாக பணியாற்றி வந்தவர் காயத்ரி ரகுராம். இவர் தமிழ் நாடு மற்றும் அயல்நாட்டு தமிழ் வளர்ச்சி துறையில் தலைவராக இருந்து இவர் பாஜக கட்சியில் சேர்ந்ததில் இருந்து பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி வருகிறார்.

-விளம்பரம்-

குறிப்பாக காயதிரி ரகுராம் ஒவ்வொரு முறை உயர் பதவி பெரும் போதும் இவரது பெயர் அடிப்பட்டு விமரிசிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான சூர்யா – டெய்சி அடியோவினாலும் அலிஷா விவரகத்தினாலும் தற்க்கலிகமாக நீக்கப்பட்ட காயதிரி ரகுராம் கடந்த சில நாட்களுக்கும் முன்னர் முழுமையாக கட்சியில் இருந்து வெளியேறினார். இவர் வெளியேறியதில் இருந்து பல்வேறு செய்தி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

- Advertisement -

திருச்சி சூர்யா விவகாரம் :

இந்த நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது `கடந்த 2 மாதங்களாக பாஜகவில் பிரச்னை நடந்து வருகிறது. தமிழக பாஜக தலைவர் எந்த விதத்தில் பெண்களுக்கு ஆதரவாக இருக்கிறார். திருச்சி சூர்யா மற்றும் டெய்சி விவகாரத்தில் சூர்யாவை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கினார். இதனையடுத்து சூர்யா கட்சியில் இருந்து விலகிய நிலையில் அவரது விலகலை ஏன் அண்ணாமலை ஏற்கவில்லை . அவர் தவறு செய்த்தவர் என்று தெரிந்தும் ஏன் எதையும் செய்யவில்லை. அதே போல நடிகை அலீஷுவும் சூர்யா தான்னை ஆபாசமாக கூறியதாக அதே நேரத்தில்தான் கூறியிருந்தார்.

ஹோட்டலில் நடந்தது :

பாஜகவின் மாவட்ட செயலாளர் கூடத்தில் 150 பேருக்கு முன்னர் என்னை அசிங்கப்படுத்தியதும், திமுக பிரமுகருடன் துபாய் ஹோட்டலில் இருதேன் என்று தவறான அர்த்தத்தில் பேசினார். ஒரு பெண்ணை எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படி கேவலமாக பேச முடியும். சென்னையில் நடந்த ஒரு பிறந்தநாள் விழாவில் திமுக பிரமுகர் வந்திருந்தார். அவர் நலம் விசாரித்தார், நானும் நாகரிகத்திற்காக நலம் விசாரித்தேன். அவர் திமுகவை சேர்ந்தவர் என்பதினால் கத்தியால் குத்த வேண்டுமா? என்று ஆவேசமாக பேசினார்.

-விளம்பரம்-

ஆதாரம் இருக்கிறது :

அண்ணாமலையை பதவியில் இருந்து தூக்க என்னிடம் பல ஆதாரங்கள் இருக்கின்றது. ஆனால் அண்ணாமலை அவருடைய பேட்டியில் கூறுகையில் “காயதிரி ரகுராம்” என்னை பற்றி குற்றசாட்டுகளை வைத்தாலும் ஏனக்கு கவலையில்லை, அது என்னை மேலும் பிரபலமாக்குகிறது என்று கூறினார். அப்படியென்றால் அவர் என்னுடைய பெயரை வைத்து பிரபலமடைகிறாரா?. நம் மீது ஒருவர் குற்றம் சாட்டுகிறார் என்றால் அதற்கு பாதிலளிக்காமல் நான் பிரபலமடைகிறேன் என்று எந்த தலைவராவது சொல்லுவார்களா? என்று கேட்டார் காயதிரி ரகுராம்.

தைரியம் இருக்கிறதா ? :

மேலும் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை பெண்களிடத்தில் தோற்று விட்டார். திருச்சி சூர்யா பிரச்சனையில் ராஜினாமாவை அண்ணாமலை ஏற்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர் அண்ணாமலை மீது பல குற்றசாட்டுகளை முன்வைத்தார். மேலும் சமீபத்தில் காயதிரி ரகுராம் போட்டிருந்த ட்விட்டர் பதிவில் நான் அண்ணாமலையுடன் நேர்காணலில் பேச வேண்டும். அவருக்கு என்னிடம் பேச தைரியம் இருக்கிறதா? என்று பதிவிட்டிருந்தார் காயதிரி ரகுராம்.

Advertisement