என் சினிமா துறையில் இரண்டு தங்க மனிதர்கள் இந்த உழைப்பாளர் தினத்தில் ஒரே பிறந்தநாளை பகிர்ந்து கொள்கிறார்கள் – காயத்ரி பதிவு.

0
426
Ajith
- Advertisement -

கோலிவுட்டில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்தை எடுத்து இருக்கிறார்கள். இந்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து AK62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக தகவல்கள் வெளியானது. பின்னர் அந்த படத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

- Advertisement -

இதனை தொடர்ந்து அஜித்தின் 62வது படத்தை இயக்க மகிழ் திருமேனிக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்தநாளான இன்று வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு ‘விடாமுயற்சி’ என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. அஜித்தின் பிறந்தநாளில் Ak62 படத்தின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும், இன்று அஜித்தின் பிறந்தநாளுக்கு பல்வேரு பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். மேலும், இதே தினத்தில் பிறந்தநாள் கொண்டாடும் மறைந்த தனது தந்தையும் நடன இயக்குனருமான ரகுராமிற்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களை குறிப்பிட்டு இருக்கிறது காயத்ரி.

-விளம்பரம்-

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காயத்ரி இந்த உழைப்பாளர் தினத்தில் ஒவ்வொரு துறையிலிருந்தும் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். துப்புரவு வேலை- விவசாயிகள் வேலை- அலுவலக வேலை- பொழுதுபோக்கு வேலை- அரசு வேலை – மருத்துவர்கள் வேலை – சர்வாதிகாரி வேலை எல்லாம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது.

என் சினிமா துறையில் இரண்டு தங்க மனிதர்கள் இந்த உழைப்பாளர் தினத்தில் ஒரே பிறந்தநாளை பகிர்ந்து கொள்கிறார்கள், அவர் எப்போதும் வாழ்க்கையில் மிகவும் கடினமாக உழைத்தார், என் தந்தை ரகுராம் மற்றும் அஜித்குமார் சார் என்று குறிப்பிட்டு . #LabourDay #உழைப்பாளர்_தினம் #HBDAJlTHKumar #HBDAppa போன்ற ஹேஷ் டேக்குகளையும் பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement