பிக் பாஸில் எனக்கு நீங்க சொன்னது ஞாபம் இருக்கு.! கமலை சாடிய காயத்ரி.!

0
407

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருந்து பின்னர் கதாநாயகியாக ஒரு சில படங்களில் நடித்தவர் நடன இயக்குனர் காயத்ரி. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராகவும் பங்கு பெற்று இருந்தார். அந்த சீசனில் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வந்தார் காயத்திரி.

இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இவருக்கும்ஓவியாவிற்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்தது. அப்போது இவர் ஓவியாவை கடுமையாக திட்டி இருந்தார். அதனை குறிப்பிடும் வகையில் இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த நடிகர் கமலஹாசன் காயத்ரியை மறைமுகமாகவும் நேரடியாகவும் தாக்கிப் பேசி இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரச்சாரக் கூட்டத்தில் நடிகர் கமல் சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி என்று என்று பேசிஇருந்த கருத்துக்கு தற்போது சமூக வலைதளத்தில் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதனை நடிகை காயத்ரியும் குறிப்பிட்டு ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், மன்னிப்பு மண்ணிக்கறவங்களோட மன்னிப்பு கேக்கறவங்க தான் பெரிய ஆளு, நல்ல மனிதர் என்று நீங்கள் என்னிடம் பலமுறை கூறி இருக்கிறார்கள். எனவ, இந்துக்களிடம் மன்னிப்பு கேட்பது பெரிய விஷயம் ஆகிவிடாது. இதில் நீங்கள் மதத்தினை உள்ளே கொண்டு வராதீர்கள். மாற்றத்தை கொண்டு வருவீர்கள் என்று மக்கள் பெரிதும் நம்பி இருக்கிறார்கள் மற்றவர்களைப் போல நீங்களும் இருப்பதை விரும்பவில்லை என்று கூறியுள்ளார் காயத்ரி.

-விளம்பரம்-
Advertisement