நீண்ட வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் தம்பதிக்கு இரண்டாம் குழந்தை பிறந்து இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரும்பாலும் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இடம் பிடித்து வருகிறார்கள். அதிலும், விஜய் டிவி சீரியல்கள் மட்டுமில்லாமல் நடிகைகளும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழில் பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை காயத்ரி யுவராஜ்.
இவருக்கு சிறு வயதில் இருந்தே நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதனால் இவர் முறையாக நடனமும் கற்றுக் கொண்டார். பின் இவர் தன்னுடைய கணவர் யுவராஜின் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடியதன் மூலம் தான் விஜய் டிவிக்கு அறிமுகமானார். பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் நாயகியாக அறிமுகமானவர். இதனை தொடர்ந்து இவர் அரண்மனைக்கிளி என்ற சீரியலில் நடித்தார்.
இவர் அதிகம் வில்லி கதாபாத்திரத்தில் தான் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார் என்று சொல்லலாம். மேலும், இவர் நடிப்பதோடு மட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சிகள் பலவற்றிலும் பங்கேற்று வருகிறார். மேலும், இவர் விஜய் டிவியில் மட்டுமில்லாமல் சன் டிவியில் மிகப்பிரபலமான சீரியலான சித்தி 2 தொடரிலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி படு பிஸியான காயத்ரி அவர்கள் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அதை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவார்.
காயத்ரி யுவராஜ் சீரியல்கள்:
இதுவரை இவர் சரவணன் மீனாட்சி, தாமரை, மோகினி, பிரியசகி, அழகி, பொன்னூஞ்சல், களத்து வீடு, மெல்ல திறந்தது கதவு போன்ற பல சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
காயத்ரி யுவராஜ் கர்ப்பம்:
இந்த நிலையில் காயத்ரி யுவராஜ் கர்ப்பமாக இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. டான்ஸ் மாஸ்டர் யுவராஜை காயத்திரி திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்ததே. இவர்களுக்கு தருண் என்ற மகன் இருக்கிறார். இவருக்கு 12 வயது ஆகிறது. மேலும், இவர்களுடைய மகனுடன் சேர்ந்து இவர்கள் எடுத்த ரிலீஸ் வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் படு பேமஸ்.
பிறந்தநாளில் பிறந்த மகள் :
இப்படி ஒரு நிலையில் திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழித்து மீண்டும் கர்ப்பமானார் காயத்ரி. இதனால் தான் நடித்த சீரியல்களில் இருந்து விலகிவிட்டார். சமீபத்தில் தான் காயத்ரிக்கு சீமந்தம் கூட நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் யுவராஜ் – காயத்ரி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதிலும் காயத்ரியின் பிறந்தநாளில் குழந்தை இருப்பதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார் யுவராஜ்.