வைரமுத்து சர்ச்சை குறித்து கேட்ட ரசிகருக்கு பிக் பாஸ் பிரபலம் அளித்த பதில் ..!

0
343
Vairamuthu

சினிமாவில் பாலியல் தொந்தரவுக்கு நடிகைகள் மட்டுமல்ல சில பெண் கலைஞர்களும் உள்ளாகியுள்ளனர். அந்த வகையில் பெயர் தெரியாத இளம் பெண் கவிஞர் ஒருவர் தமிழ் சினிமாவின் பிரபல கவிஞரான வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிண்ணனி பாடகி சின்மயி தனக்கு நடந்த பாலியல் தொந்தரவு குறித்து பேசியிருந்தார். பாடகி சின்மயி பேசியதையடுத்து பல பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து சமூக வலைத்தளத்தில் #metoo என்ற ஹேஸ்டாகை பயன்படுத்தி வெளிப்படையாக கூறிவருகின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் பெண்கள் ட்விட்டரில் பேசுவதற்கு பதிலாக காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் என்று கூறியிருந்தார். அதற்கு ரசிகர் ஒருவர், உங்களுக்கும் இது போன்று தொல்லைகள் வந்திருக்கிறதா என்று கேள்வி கேட்டிருந்தார்.

Gayathri

ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த காயத்ரி, என்னை பிக் பாஸ்ஸில் பார்த்த பிறகுமா ஒரு என்னிடம் தவறாக நடந்து கொள்வார் என்று நினைக்கிறீர்கள்.அப்படி நடந்தால் அவர்களுக்கு நான் இரண்டு மடங்காக பதிலடி கொடுப்பேன். எங்கள் மட்டும் இல்லை பெண் கு;குழந்தைகள் கூட இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு தான் வருகின்றனர்.

ஆனால், அணைத்து பெண்களும் என்னை போல இருக்க மாட்டார்கள். அவர்கள் வீட்டிற்காக உழைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளவர்கள். என்வே, அவர்கள் சாஃட்டாக தான் இருப்பார்கள். இந்த மாதிரியான பெண்களை தான் இதுபோன்ற ஆட்கள் கூறிவைக்கின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.