இந்தியன் 2 வில் இணைந்த கைதி பட நடிகர். அவரே சொன்ன தகவல்.

0
2484
indian-2-george

பிகில்,கைதி படங்களில் நடித்து கலக்கிய ஜார்ஜ் மரியான் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் வரவிருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்தது. இது குறித்து ஜார்ஜ் மரியானிடம் கேட்டபோது அவர் கூறியது, என்னுடைய வாழ்க்கையில எனக்கு தெரிஞ்சதெல்லாம் நடிப்பு தான். நான் கிட்டத்தட்ட 25 வருஷங்களாக நடிச்சுகிட்டு இருக்கன். என்னுடைய நடிப்புத் திறனை நான் முதல்ல நாடக மேடைகளில் தான் கத்துக்கிட்டேன். என்னோட வாழ்க்கையை நாடகங்களில் நடித்தது மூலம் தான் ஓடியது என்று கூட சொல்லலாம். கூத்துப்பட்டறைல இருக்குறப்ப நான் நடிப்பு, சண்டைப்பயிற்சி, சிலம்பம், நடனம் எனப் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். மேலும், கார்த்திக் நடிப்பில் வந்த ‘கைதி’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

Image result for george mariyan"

பிகில் படத்திலும் நடித்திருக்கிறேன். என்னுடைய சினிமா வாழ்க்கையில் நான் நடிச்ச முதல் படம் ‘அழகி’. மேலும், டாக்டர் கிருஷ்ணசாமி மூலம் தான் எனக்கு சினிமா துறையில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அவர் தான் என்னை இயக்குனர் தங்கர்பச்சன் கிட்ட அறிமுகம் செஞ்சாரு. அப்போது தொடங்கிய என்னுடைய சினிமா பயணம் இப்போது வரைக்கும் நிக்காம போயிட்டு இருக்கு. நான் சினிமா துறைக்குள் காலடி எடுத்து வைக்கும் போது பல எதிர்பார்ப்புகளுடன் இருந்தேன். ஆனா, அதெல்லாம் முதல்ல நடக்கல. நாட்கள் போகப் போகத் தான் நடக்க ஆரம்பித்தது. பின்னர் நான் சினிமா துறையிலும், நாடகங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தேன். அதற்குப் பின்னால் தான் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தது. அதோடு வருமானமும் அதிகரித்தது.

- Advertisement -

மேலும், சினிமாவில் எனக்கு தெரிஞ்சவங்க இருந்தா தான் எனக்கு வாய்ப்பு கொடுப்பாங்க, இல்லனா எனக்கு வாய்ப்பு கிடைக்காது. அதனால நான் நாடகங்களில் நடித்து இருப்பேன். எப்பவுமே சினிமா உலகத்தில் உடல், தோற்றம், அழகு என பார்த்து தான் வாய்ப்பு கொடுப்பாங்க. நான் அந்த அளவுக்கு அழகும் கிடையாது,தோற்றமும் கிடையாது. அப்புறம் சரத்குமார் சார் நடித்த ‘கம்பீரம்’ படத்தில் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பின்னர் என்னோட உருவத்தை பார்த்தவங்க போலீஸ் கேரக்டர்ல நடிக்க நீ சரியா இருக்காது என சொல்லி அனுப்பிட்டாங்க. ஆனால், நான் சினிமா படங்கள்ல அதிகமாக போடுற கதாபாத்திரமே போலீஸ் கெட்டப் தான். நான் இதுவரையும் சினிமா துறையில சிரிப்பு போலீஸாக தான் நடித்திருக்கிறேன்.ஆனா, சீரியஸ் போலீசாக நடிக்க ஆசை.

indian-2

அதுக்கு பிறகு நாசர் சார் எனக்கு பட வாய்ப்புகள் நிறைய கொடுப்பாரு. அவரை தொடரந்து ஏ.எல். விஜய் சார் எல்லா படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுப்பார். நான் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் ‘ஆண்டவன் கட்டளை’ படத்திற்குப் பிறகு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தது கார்த்திக்கின் ‘கைதி’ படத்தில் தான். இது என் வாழ்க்கையில ரொம்ப சந்தோஷமான படம். அதே மாதிரி நடிகர் பசுபதியும், நானும் கூத்துபட்டறையில் தான் அறிமுகம் ஆனோம். கமல் சார் நடிப்பில் வந்த ‘விருமாண்டி’ படத்துல எனக்கு ரோல் வாங்கி கொடுத்தார் பசுபதி. ஆனால், சில காரணங்களால் என்னால் அவருடன் நடிக்க முடியல. எனக்கு வருத்தமா இருந்துச்சு. ஆனா, இப்போது எனக்கு கமல் சார் நடிப்பில் வர ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. எனக்கு இது ரொம்ப சந்தோஷமான செய்தி.

-விளம்பரம்-
Advertisement