இந்தியா-சீனாவுக்கு இடையே நடந்த எல்லைப் பிரச்சனையில் பல சோக சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளது. லடாக் எல்லையில் சீன ராணுவம் கடந்த மாதம் அத்துமீறலில் ஈடுபட்டது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க இந்திய -சீன ராணுவ அதிகாரிகள் மத்தியில் பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அங்கு ஓரளவு நிலைமை சரியாக தொடங்கியது. இந்த நிலையில் கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் இறந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்த சூழ்நிலையில் இந்தியாவில் விற்கப்படும் சீனப் பொருட்களை தடை செய்யவேண்டும் என்கின்ற முழக்கம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக சீனாவின் ஐம்பதுக்கும் மேற்பட்ட செயலிகள் இந்தியாவில் உபயோகத்தில் உள்ளன. இவற்றை உபயோகிக்க வேண்டாம் என்று நெட்டிசன்கள் குரல் கொடுத்து வருகின்றனர். தற்போது இந்த தகவல் இணையங்களில் அதிகமாக பகிரப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்கள் தான் உபயோகித்து வந்த சீன செயலிகளான ஹலோ மற்றும் டிக் டாக் இரண்டையும் நீக்கி விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நான் என்னுடைய இந்த இரண்டு செயலிகளையும் நீக்கி விட்டேன். நீங்கள் ? என்ற ஒரு கேள்வியையும் தன் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். தற்போது இந்த டீவ்ட் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா உலகில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த வாகை சூடவா என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். அதை தொடர்ந்து இவர் குட்டிபுலி, நையாண்டி, திருமணம் என்னும் நிக்கா, உத்தமவில்லன், பாபநாசம், மகளிர் மட்டும், அறம், தீரன் அதிகாரம் ஒன்று, விஸ்வரூபம்-2 போன்ற பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

Advertisement
Advertisement