சினிமா திரை உலகில் உருவாகும் படம் என்றாலே ஹீரோ ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு வில்லன்களும் தேர்வார்கள். மேலும், அந்த படத்தை பெரிய அளவில் ஹிட்டாக கொண்டு போவதும் வில்லன்களின் கதாபாத்திரம் தான். அதிலும் தமிழ் சினிமாவில் பல வில்லன்கள் நடித்துள்ளார்கள்.ஒரு படம் என்றாலே எப்பவுமே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பார்கள் ஹீரோக்கள். ஆனால், படங்களில் நடிக்கும் வில்லன்களில் ஒரு சில பேர் மட்டும் தான் மக்கள் மனதில் அதிக இடம் பிடிப்பார்கள். அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் 70வது காலகட்டங்களில் இருந்து முறுக்கு மீசை போல் தோன்றிய வில்லன்கள் முதல் இப்போது இருக்கும் ஹைடெக் மாடர்ன் வில்லன்கள் வரை மக்கள் மனதில் ஒரு சில பேர் மட்டும் தான் இடம் பிடித்துள்ளார்கள். இந்த நிலையில் வில்லன் கதாபாத்திரங்களுக்கு துணை கதாபாத்திரங்கள் இடத்தில் நடிக்கும் நடிகர்கள் சில நேரங்களில் பெரிதாகப் பேசப்படுவதே இல்லை.

வில்லன்களே நினைவில் இல்லாத போது அவர்களுக்கு துணையாக நடிக்கும் நடிகர்கள் மட்டும் எப்படி ஞாபகத்தில் வருவார்கள் என்ற கருத்தும் எழுந்து உள்ளது. அந்த வரிசையில் பல ஆண்டுகளாகவே பல படங்களில் வில்லன்களுக்கு துணை கதாபாத்திரமாக நடித்து தற்போது வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ‘கராத்தே ராஜா’. இவர் சினிமா துறையில் நடிக்க வருவதற்கு முன்பு பள்ளிகளில் கராத்தே வகுப்பு ஒன்று நடத்தி வந்துள்ளார். மேலும், இவருக்கு சினிமா துறையில் வில்லனாக நடிக்கும் ஆசை. அதனால் தான் இவர் பள்ளியில் கராத்தே சொல்லித் தரும் பயிற்சியை விட்டு சென்னைக்கு வந்தார். பின் 2004 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் படம் ஆகிய ‘விருமாண்டி’ படத்தில் நடித்தார். இது தான் தமிழ் சினிமா உலகில் முதல் படமாகும். அதுமட்டும் இல்லாமல் முதல் படத்திலேயே நல்ல பெயரை வாங்கி இருந்தார் கராத்தே ராஜா.

இதையும் பாருங்க : மகளின் தோற்றத்தை பற்றி கேவலமாக பேசிய நபர். வெளுத்து வாங்கிய குஷ்பூ.

Advertisement

அதற்கு பின்னர் இவருக்கு சினிமா துறையில் பல பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. பின்னர் சினிமாவில் வந்த பட வாய்ப்புகள் குறித்து சந்தோஷத்தில் மூழ்கி போனார் கராத்தே ராஜா. மேலும், இவர் நிறைய படங்களில் தன்னுடைய திறமையைக் காட்டினார். அதோடு “விஜய்யின் கில்லி,கமல்ஹாசனின் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், போக்கிரி என பல சூப்பர் ஹிட் படங்களில் வில்லன்களுக்கு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்குப் பின்னர் சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்று கதையை உருவாக்கும் படத்தில் நடிகர் கராத்தே ராஜா அவர்கள் வீரப்பன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சொல்லப்போனால் கராத்தே ராஜா அவர்கள் வீரப்பன் ஆகவே வாழ்ந்து வந்தார் என்று கூட சொல்லலாம். இவர் சினிமா துறையில் அதிகம் தன்னுடைய நடிப்பில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

கராத்தே ராஜா அவர்கள் பிறகு 2009 ஆம் ஆண்டு திவ்யா என்பவருடன் திருமணமானது. கராத்தே ராஜா– திவ்யா தம்பதியினருக்கு அழகாக மூன்று பெண் குழந்தைகள் உள்ளது. அதோடு இவர் திருமணத்திற்குப் பிறகு நிறைய படங்களில் நடித்தும் வந்தார். இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு கராத்தே ராஜாவுக்கும் அவருடைய மனைவி திவ்யாவிற்கு சில கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் திவ்யா அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினார். மேலும், கராத்தே ராஜா அவர்கள் உடனடியாக காவல் துறைக்குச் சென்று தன் மனைவியை காணவில்லை என்ற புகாரும் செய்தார்.

Advertisement

அதன் பின்னர் தான் திவ்யா வீட்டிற்கு வந்து சேர்ந்தார். பின் தற்போது கராத்தே ராஜாவும், திவ்யாவும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பரஸ்பரமாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு கராத்தே ராஜா அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். கராத்தே ராஜா தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இவர் கடைசியாக தமிழில் விமல் நடிப்பில் வெளிவந்த ‘மன்னார் வகையறா’ படத்தில் நடித்திருந்தார்.

Advertisement
Advertisement