மகளின் தோற்றத்தை பற்றி கேவலமாக பேசிய நபர். வெளுத்து வாங்கிய குஷ்பூ.

0
279417
Kushboo
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை குஷ்பூ. உண்மையிலேயே குஷ்புவின் இயற்பெயர் நக்கர்த் கான் ஆகும். இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் சினிமா திரை உலகில் 1980களில் வெளி வந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமானார். பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமே அவருடைய முதல் படமாகும். பின்னர் நடிகை குஷ்பூ 90 களில் உள்ள தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாகவும் விளங்கியுள்ளார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது குஷ்பூ அவர்கள் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

பின் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், நடுவராகவும் பணியாற்றி வருகிறார். அதுமட்டும் இல்லாமல் தன் கணவர் சுந்தர்.சி ஹீரோவாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். குஷ்பு–சுந்தர்.சி ஆகிய தம்பதிக்கு அவந்திகா, ஆனந்திகா என்ற இரண்டு பெண்கள் உள்ளார்கள். மேலும்,நடிகை குஷ்பூ மக்கள் மத்தியில் இந்த அளவிற்கு பிரபலம் ஆவதற்கு முக்கிய காரணம் என்று பார்த்தால் அது ‘சின்னத்தம்பி’ படம் தான். ஏன்னா,இந்த படத்தின் மூலம் குஷ்பூ மக்கள் மனதில் அதிக இடம் பிடித்து உள்ளார். பின்பு ரிக்ஷா மாமா, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, நாட்டாமை, அண்ணாமலை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார் நடிகை குஷ்பூ.

- Advertisement -

பின்னர் 2000ம் ஆண்டு சினிமா துறையில் பிரபலமான இயக்குனர் சுந்தர்.சியும், குஷ்பூவும் திருமணம் செய்து கொண்டார்கள். அதோடு சினிமா உலகில் 90 களின் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. மேலும், ரசிகர்கள் குஷ்பு மீது உள்ள பற்றின் காரணமாக அவருக்கு கோவில் ஒன்று கட்டி உள்ளார்கள். தற்போது நடிகை குஷ்பு அவர்கள் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களிலும் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தான் தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக முடிவடைந்தது. மேலும், குஷ்பு அவர்கள் தன் மகள்களுடன் தீபாவளி கொண்டாட்டத்தை சந்தோசமாக மகிழ்ந்து வந்தார்.

அதிலும் குஷ்பு அவர்கள் தீபாவளி பண்டிகையின் போது தன் மகளுடன் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் சமூக வலைகளில் குஷ்புமகள் தோற்றத்தை பார்த்து ரசிகர் ஒருவர் தவறாக தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். மேலும்,குஷ்பு மகள் தோற்றத்தையும் முகத்தையும் கிண்டல், கேலி செய்து வந்துள்ளார். இதை பார்த்த குஷ்பூ அவர்கள் அந்த நபரை தாறுமாறாக கிழி கிழி என்று கிழித்து எறிந்தார். எந்த தாயும் தன் குழந்தைகளைப் பற்றி கேவலமாக திட்டினால் எல்லா தாய்க்கும் கோபம் வரும். மேலும், ட்விட்டரில் பதிவு செய்யும் பல கருத்துக்கள், புகைப்படங்கள் எல்லாவற்றிக்கும் பாராட்டவில்லை என்றாலும் அவர்கள் தோற்றத்தையும், வேறு சம்பந்தமாகவோ கிண்டல் கேலி செய்வது மிகவும் தவறான ஒன்று என்று நெட்டிசன்கள் கூறினார்கள்.

-விளம்பரம்-
Advertisement