கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மோகன்லால் நடித்த ‘வெளிபடிண்டே புஸ்தகம்’ படத்தின் ஜிமிக்கி கம்மல் என்ற பாடல் பெரிய அளவில் வைரலானது. இந்த பாடல் குறிப்பாக கேரளா வர்த்தக பள்ளியின் ஆசிரியர் ஷெரில் என்ற பெண் தன் குழுவினருடன் ஆடிய நடனம் உலகம் முழுவதும் பிரபலமானது.

Advertisement

தற்போது அந்த பாடலுக்கு எய்ட்ஸ் நோய்க்கு விழிப்புணர்வாக கேரளாவின் மனபுரத்தில் உள்ள பல் மருத்துவ கல்லூரியின் முஸ்லீம் மாணவிகள் மூவர் பிளாஷ் மாப் என புர்காவுடன் டான்ஸ் ஆடியுள்ளனர். மேலும், அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்கில் வைரலாகி வருகிறது.

புர்கா மற்றும் ஜீன்ஸ் அணிந்து மூவரும் ஆடியதால் மத அமைப்புகள் சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், பலர் இது அவர்களது அடிப்படை உரிமை என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்

Advertisement

சமீபத்தில் தான் முத்தலாக் தொடர்பான பிரச்சனைகள் ஓங்கி வருக நிலையில் தற்போது இப்படி ஒரு வீடியோ வைரலாகி வருவதால் முஸ்லீம் அமைப்புகள் அதிர்ச்சி ஆகி வருகின்றன

Advertisement
Advertisement