“ரஞ்சிதமே” பாடலில் விஜய் நடனத்திற்கு டஃப் கொடுத்த டிக் டாக் நடன கலைஞர் – இன்ஸ்டா புகைப்படங்கள பாத்தா மெரண்டுடுவீங்க.

0
493
ranjithame
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் நடிப்பில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. சமீபத்தில் விஜய்யின் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தை தில்ராஜூ தயாரிக்க தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கியிருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 300 கோடி வரையில் தற்போது வசூலித்துள்ளதாக அதிகாரிப்பூர்வமான தகவல் கிடைத்துள்ளது.

-விளம்பரம்-

இந்நிலையில் வாரிசு படம் வெளியாவதற்கு முன்னரே பொங்கலை முன்னிட்டு படத்தின் ரஞ்சிதமே பாடல் வெளியானது. நவீன இசைக்கருவிகளின் இசையும் தமிழ் நாட்டுப்புற இசையும் ஒன்றாக இருத்தால், இந்த பாடல் விஜய் ரசிகர்கள் மட்டுமின்று பொதுவான ரசிகர்களையும் ஈர்த்தது. 4 நிமிடம் 49 வினாடிகள் நீளமுள்ள இந்தப் பாடல் தளபதியும் நடனத்தினாலும் பின்னணி இசையினாலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு இன்ஸ்டா, ட்விட்டர், பேஸ் புக் என ஷோசியல் மீடியாக்களில் ட்ரெண்டானது.

- Advertisement -

இவை ஒருபக்கம் இருக்க வாரிசு படத்தின் “ரஞ்சிதமே” பாடல் வெளியானதிற்கு பிறகு பல விதமான எதிர்ப்புகள் எழுந்தன. முக்கியமாக இப்பாடலில் விஜய்யின் நடனம் குறித்தும், ராஷ்மிகாவின் உடை குறித்தும் பலவிதமான மீம்ஸ்கள் சோசியல் மீடியாவில் வெளியானது. மேலும் ரஞ்சிதமே பாடத்தில் வரும் “உச்சி கொட்டும் நேரத்தில் உச்ச கட்டம் தொட்டவளே” என வரும் வசனங்கள் குறித்தும் பலவிதமான சர்ச்சைகள் கிளம்பின, அதோடு பாடல் “மொச்ச கொட்ட பல்லழகி” என்ற பழைய பாடலின் பிரதி என்று பல விதமாக விமர்சிக்கப்பட்டது.

இந்த விஷயம் குறித்து வாரிசு படத்தில் எழுத்தாளரான பிரபல பாடலாசிரியர் விவேக் கூறுகையில் “ரஞ்சிதமே” பாடலுக்கும் “மொச்சக்கொட்டா பல்லழகி” பாடலுக்கும் உள்ள ஒற்றுமை குறித்து எழுந்த சர்ச்சைக்கு பதிலளித்துள்ளார். இது தமிழ் நாட்டுப்புறப் பாடல்களுக்கான டெம்ப்ளேட் என்றும், ரஞ்சிதமே பாடல் தொடங்கும் முன்பே திரைப்படத்தில் அதைப் பற்றி குறிப்பிட்டு “மொச்சக்கொட்டா” பாடலுக்கு தயாரிப்பாளர்கள் பெருமை சேர்த்துள்ளனர் என்றும் பாடலாசிரியர் கூறினார்.

-விளம்பரம்-

இந்நிலையில் “ரஞ்சிதமே” பாடலின் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தவர்களில் விஜய்யின் அருகே நடனமாடிய சிவப்பு நிற உடை அணிந்திருந்த அம்பிகா கோலி என்கிற பெண் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். இவர் சோசியல் மீடியாவில் பிரபலமான மாடலாக, நடன கலைஞராகவும் திகழ்ந்து வருகிறார். மேலும் டிக் டாக்கில் பிரபலமான இவர் விஜய்யின் “ரஞ்சிதமே” பாடலில் விஜய்க்கு இணையாக நடனமாடியிருந்தார்.

இந்நிலையில் கடந்த சில பாடலின் HD பதிப்பு வெளியான நிலையில் ரசிகர்கள் இந்த பெண்ணின் நடனத்தை தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள். அதே போல இவரது இன்ஸ்டா புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரது இன்ஸ்டா பக்கத்தில் படு கிளாமரான புகைப்படங்கள் குவிந்து இருக்கின்றன.

Advertisement