தெலுங்கில் ‘கோட்’ படத்தின் தோல்வியால் நானியின் படத்திற்கு அடித்திருக்கும் ஜாக்பாட் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான நடிகர் விஜயின் ‘கோட்’படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், அஜ்மல், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கிய இப்படம், உலகம் முழுவதும் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
கோட்-தெலுங்கில் தோல்வி:
மேலும், இப்படம் தமிழகத்தில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூல் ரீதியாக நல்ல சாதனை செய்து வருகிறது. அதனால் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். அதே வேளையில், கோட் திரைப்படம் தெங்லுகில் படுதோல்வியை தழுவி இருக்கிறது. தெலுங்கில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ‘கோட்’ படத்தின் தெலுங்கு பதிப்பை வெளியிட்டது. இந்த நிறுவனம் சுமார் 12 கோடி ரூபாய்க்கு இந்த உரிமம் பெற்றதாக கூறப்படுகிறது.
நானிக்கு ஜாக்பாட்:
ஆனால், கோட் படம் வெளியாகி முதல் இரண்டு நாட்களில் தெலுங்கில் வெறும் ஐந்து கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்து இருந்தது. அதனைத் தொடர்ந்து கோட் படத்தை யாரும் சீண்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோட் படம் தெலுங்கில் படு தோல்வியை தழுவியது உறுதியாகியுள்ளது. அதனால் கோட் படத்தின் தோல்வியால் நடிகர் நானியின் படத்திற்கு ஜாக்பாட் அடுத்துள்ளது. அதாவது நானி சமீபத்தில் ‘சரிபோதா சனிவாரம்’ என்னும் படத்தில் நடித்திருந்தார்.
சரிபோதா சனிவாரம்:
இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியிருந்தார். இப்படம் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியாகி, நல்ல வசூல் சாதனை செய்து வந்தது. ஆனால் அதற்குப் பிறகு ‘கோட்’ படம் வெளியானதால், இப்படத்தை பல திரையரங்குகளில் இருந்து தூக்கினர். ஆனால், எதிர்பாராத விதமாக ‘கோட்’ படம் தெலுங்கில் படும் தோல்வி அடைந்தது. அதனால் மீண்டும் பல்வேறு திரையரங்குகளில், ‘சரி போதா சனிவாரம்’ திரைப்படத்தை திரையிட்டு வருகின்றனர்.
கேரளா மற்றும் கர்நாடகா:
மேலும், சரிபோதா சனிவாரம் படம் தமிழில் ‘சூர்யாவின் சாட்டர்டே’ என்று வெளியிடப்பட்டது. இப்படத்தில் நானியுடன் இணைந்து பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். அதேபோல் கேரளா மற்றும் கர்நாடகாவில் ‘கோட்’ படத்தின் முதலீட்டுக்கு வசூல் மோசம் இல்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனாலும், வரும் நாட்களில் வசூல் நிலவரங்கள் வெளியாகும் போது தான் முழுமையான உண்மை நிலை என்ன என்பது தெரியவரும்.