-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

மதுரை திரையரங்கில் கோட் படம் பார்க்க விஜய் ரசிகர்கள் செய்த அட்டகாசம், பொதுமக்களுக்கு பாதிப்பு

0
167

கோட் படத்திற்காக விஜய் ரசிகர்கள் செய்திருக்கும் அட்டகாசம் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் தான். அந்த வகையில் இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் வெளியாகி இருந்த ‘லியோ’ பட படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

-விளம்பரம்-

லியோ படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய்யின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், அஜ்மல், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். மேலும், ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது.

கோட் படம்:

இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் விஜய் -டிஏஜிங் தோற்றத்திலும், ஏஐ தொழில்நுட்பம் மூலம் மறைந்த விஜயகாந்தையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் மறைந்த பாடகி பவதாரிணியின் குரலை தொழில்நுட்பம் மூலம் ஒரு பாடலில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இன்று தமிழகம் முழுவதும் காலை 9:00 மணி மணிக்கு கோட் படம் வெளியாகி இருக்கிறது.

படம் குறித்த தகவல்:

-விளம்பரம்-

மொத்தம் 750 திரையரங்களில் படம் வெளியிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற மாநிலங்களில் அதிகாலை 4:00 மணி முதலே கோட் படம் திரையிடப்பட்டது. வழக்கம்போல திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் கடல் அலை போல கூடியது. விஜய் ரசிகர்களும் பட்டாசு, பேனருக்கு பால் அபிஷேகம், மேல தாளம் என்று உற்சாகத்தில் கொண்டாடி இருக்கிறார்கள். முதல் நாள் முதல் காட்சியிலேயே வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன், யுவன் சங்கர் ராஜா, திரிஷா, கீர்த்தி சுரேஷ், அர்ச்சனா ஆகியோர் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

விஜய் ரசிகர்கள் செய்தது:

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் விஜய் ரசிகர்கள் செய்திருக்கும் வேலை தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அதாவது, மதுரையில் உள்ள திரையரங்கிற்கு விஜய் ரசிகர்கள் வாகனத்தில் சென்றிருந்தார்கள். அப்போது சாலை நடுவே வாகனத்தை நிறுத்திவிட்டு ஹாரன் அடித்து ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்திருக்கிறார்கள்.

பொது மக்களுக்கு ப்ரச்சனை:

இதனால் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டதால் சாலையில் பயணிக்க முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் மற்ற வாகனங்கள் சாலையில் பயணிக்கக் கூடாது என்பதற்காக விஜய் ரசிகர்கள் கூச்சலிட்டு இருந்தார்கள். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து அதிகம் பாதிக்கப்பட்டது. இதனால் மக்களுக்கும் இடையூறு ஏற்பட்டது. தற்போது மதுரை திரையரங்கம் உள்ள பகுதியில் பரபரப்பாக இருக்கிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news