நள்ளிரவில் கால் செய்து திட்டுகின்றனர் – அறம் பட இயக்குனர் கோபி வருத்தம்:

சமீபத்தில் வந்த தமிழ் படங்களில் மிகத் தரமான படமாக பார்க்கப்பட்டது அறம். இந்த படத்தில் நயன்தாரா தனியாக ஒரு கலெக்டராக நடிக்க படத்தினை ‘கோபி நயினார்’ இயக்கியிருந்தார்.
இப்படம் மக்களின் ஏகோபித்த வரவேற்பினை பெற்றது மட்டுமில்லாமல், பல அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் போலீஸ் கமிஸ்னர்கள் ஆகியோரது பாராட்டினையும் பெற்றது.

Advertisement

டத்தின் இயக்குனர் தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது:

ஆழதுளை போர் கிணறுகளிள் குழந்தைகள் தவறி விழுவதைப் பார்த்து தான் இந்தக் கதையை எழுதினேன். படத்தினை நயன்தாராவிட்ம கூறிய போது, அவர் தயாரிப்பார் எனதான் நினைத்தேன்.
ஆனால், அவரே நடிப்பார் என கூறி எனக்கு அதிர்ச்சி அளித்து விட்டார். இதனால், இன்னும் சீரிய முறையில் வசனங்களை எழுதினேன்.ஆனால், இது போன்ற தரமான ஒரு படத்தினை கொடுத்த என்னால் அறத்தின் வெற்றியைக் கொண்டாட முடியவில்லை.
இரவில் தூங்கும் போது கால் செய்து என்னையும் என் வீட்டுப் பெண்கலையும் தகாத முறையில் திட்டுகின்றனர். நல்ல படத்திற்க்காக கொடுக்கும் பரிசா இது?. என்ன ஆனாலு, வாட்மேன் வேலைக்குக் கூட போவேன் ஆனால், மசாலா படத்தினை ஒரு போதும் எடுக்க மாட்டேன் எனக் கூறினார் கோபி.

Advertisement
Advertisement