பல கோடி ரூபாய் மோசடி, கொலை மிரட்டல். கைது செய்யப்பட்ட வனிதாவின் உறவினர் ஹரி நாடார். (இவ்ளோ நகையா வச்சிருந்தாரு)

0
3751
hari

கழுத்திலும் கைகளிலும் கிலோ கணக்கில் தங்க நகைகளுடன் வலம் வருபவர் ஹரி நாடார். அவரது ஆபரண அணிகலன்களாலேயே மிகவும் பிரபலமானவர். இவர் ‘பனங்காட்டுப் படை’ எனும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்தவர். சமீபத்தில் கூட இவர் விமான நிலையம் சென்ற போது வருமான வரித்துறையினர் வளைத்து பிடித்து நகைகள் குறித்து விசாரித்த போது 1 கோடியே 52 லட்ச ரூபாய்யை முன்கூட்டியே கட்டி மிரளவைத்தார் ஹரி நாடார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி அரசியலில் கலக்கி வரும் ஹரி நாடாருக்கு சினிமாவிலும் நடிக்க ஆசை வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் அந்த படத்தை இவரே தாயரிக்க இருக்கிறார். இவரின் தயாரிப்பு நிறுவனமான ‘அண்ணாச்சி சினி மார்க்’ தயாரிப்பில், ஹரி நாடார் நடிக்கும் அந்தப் படத்தின் பூஜை கடந்த பிப்ரவரி 27 ஆம் வடபழனியில் இருக்கும் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நடைபெற்றது.

இதையும் பாருங்க : திருநங்கைகளுக்கும் இலவச பஸ் பயண திட்டத்தை அறிவித்தால் நல்லா இருக்கும் – கோரிக்கை வைத்தவருக்கு ஸ்டாலின் அளித்த பதில்.

- Advertisement -

இப்படத்தை முத்தமிழ் வர்மா என்பவர் எழுதி இயக்குகிறார். இந்த விழாவில் பேசிய ஹரி நாடார், வனிதா தனக்கு தூரத்து சொந்தம் என்றும் தனக்கு அவர் அண்ணி முறை என்றும் கூறி இருந்தார். சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு 37,727 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். இப்படி ஒரு நிலையில் பல்வேறு தொழிலதிபர்களிடம் பண மோசடி செய்யப்பட்டதாக கைது செய்யப்ட்டுள்ளார்.

பெரிய தொழிலதிபர்களுக்கு திடீரென பணத்தேவை ஏற்படுவதைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்கு 6 சதவிகிதத்தில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிக் கொடுப்பதாக கூறி கோடி கணக்கில் பணம் வாங்கி கொண்டு அதனை தேர்தலுக்கு செலவு செய்துள்ளார். ஆனால், யாருக்கும் கடன் வாங்கி கொடுக்காமல் இருந்துள்ளார். பணத்தை திருப்பிக்கேட்டால் ஆட்களை வைத்து கொலை மிரட்டலும் விட்டுள்ளார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் தான் பெங்களூருவைச் சேர்ந்த வெங்கட்ராமன் சாஸ்திரிக்கு ரூ.360 கோடி கடன் வாங்கிக் கொடுப்பதாகச் சொல்லி புரோக்கர் கமிஷனாக 7.2 கோடி ரூபாயை வாங்கியிருக்கிறார். கடன் வாங்கி கொடுக்காததால் வெங்கட்ராமன் தான் கமிஷனாக கொடுத்த 7.2 கோடி ரூபாயை திருப்பி கேட்டுள்ளார். ஹரி நாடாரும் அவரது கூட்டாளிகளும் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். இதனால் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பெயரில் கேரளாவின் பூவார் பகுதியில் உள்ள ரிசார்ட்டில் பதுங்கியிருந்த ஹரி நாடார் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 3,893 கிராம் தங்க நகை, ரூ.8.76 லட்சம் ரொக்கப் பணம், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

Advertisement