‘நான் ATM தான’ தாழ்வு மனப்பான்மையோடு இருந்த கோலி சோடா நடிகையை வேற லெவலில் மாற்றிய மேக்கப் ஆர்ட்டிஸ்ட்.

0
1099
Seetha
- Advertisement -

கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான படம் தான் “கோலி சோட”. இப்படத்தில் “பசங்க” படத்தில் நடித்த பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அதோடு 4 சிறுவர்கள் கதாநாயகன்களாக நடித்துள்ள இப்படம் வெளியாகி பெரும் வரவேற்பையும் பெற்றது. இந்த நிலையில் இப்படத்தில் நடித்தவர் தான் நடிகை சீதா. ஆனால் இவருக்கு அந்த படத்திற்கு பிறகு பெரிதாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை சீதா தன்னுடைய நிலைமை பற்றி விளக்கினார்.

-விளம்பரம்-

அவர் கூறுகையில் “நான் அழகாக இல்லாத காரணத்தினால் எனக்கு படங்களில் நடிக்க கிடைக்கவில்லை. படத்தின் நடிப்பதற்கு முன்னர் என்னுடைய சொந்தமே உன்னை யாரவது நடிக்க கூப்பிடுவார்களா? உன்னுடைய மூஞ்சியை யார் நடிக்க கூப்பிடுவார்கள் என்று கூறினார்கள். நான் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது என்னுடைய அண்ணன் உறவினர்களுக்கு சொன்னார். ஆனால் அவர்கள் இந்த பொண்ணு போய் நடிக்க போகுதா? அதனுடைய மூஞ்சி எப்படி இருக்கிறது என்று கேட்டார்கள்.

- Advertisement -

அதோடு என்னுடைய நண்பர்களே கேட்டார்கள் உன்னயெல்லாம் எப்படி படத்தில் நடிக்க அழைத்தார்கள் என்று. ஆனால் படம் வெளியான பிறகு நான் படத்தில் நடித்தினால் அதிகம் அலட்டிக்கொள்கிறேன் என்று தவறாக கூறினார்கள். அம்மா வேலை செய்து தான் எங்களை பார்த்துக்கொண்டார்கள், அக்காவிற்கு திருமணம் செய்து வைத்தும் அம்மாதான். அப்பவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அம்மாதான் எங்கள் வீட்டை பார்த்துக்கொள்கிறார். அவரை நன்றாக வைத்துக்கொள்வதே என்னுடைய ஆசை.

அம்மாதான் எனக்கு படவாய்ப்பு வந்த பிறகு படத்தில் நடிக்க உதவியாக இருந்தார். ஆனால் என்னுடைய நண்பர்கள் நடிப்பதற்கு போக வேண்டாம் என்றும் உன்னை ஏதாவது செய்து விடுவார்கள் என்று கூறினார்கள். ஆனால் நடிக்க வந்த பிறகுதான் தெரிந்தது அப்படி எதுவும் கிடையாது என்று. என்னுடைய அம்மா வேலைக்கு சென்று கஷ்டப்படுவதை பார்த்து நான் உங்களுக்கு உதவுகிறேன் என்று கூறினேன் ஆனால் அம்மா நான் உயிருடன் இருக்கும் வரையில் நான் தான் உன்னை காப்பாற்றுவேன் என்று கூறி மறுத்துவிட்டார்.

-விளம்பரம்-

பலர் நினைக்கின்றனர் சினிமாவில் இருப்பவர்கள் அதிகமாக சம்பாதிப்பார்கள் என்று. ஆனால் அவர்கள் நினைப்பது தவறு சினிமாவை பொறுத்தவரையில் ஒரு நாள் சம்பளம் போன்றுதான். ஒரு சில மாதங்கள் ஒரு நாள் இரண்டு நாட்கள் மட்டும் தான் வேலை இருக்கும், சில மாதங்கள் அந்த வேலையும் இருக்காது. அதனால் பல கஷ்டங்களும் எங்களுக்கு ஏற்படும் என்றார்.

மேலும் பேசிய நடிகை சீதா “எனக்கு படத்தில் வாய்ப்பு கிடைத்து தற்ச்செயலாகத்தான். நான் ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது ஒருவர் என்னிடம் வந்து போன் நம்பர் கேட்டார். நான் தரமுடியாது என்று கூறி கடுமையாக திட்டிவிட்டேன். அதற்கு பிறகு என்னை பின்தொடர்ந்து வந்த அந்த நபரின் ஆட்கள் அடுத்தநாள் என்னுடைய தோழியின் வீட்டிற்கு சென்று கேட்டார் அவர்களும் இவர்களை திட்டிய பிறகுதான் தெரிகிறது இவர் இயக்குனர் என்று. அதற்கு பிறகு இயக்குனரின் முகத்தை பார்பதற்க்கே கடினமாக இருந்தது.

வேற லெவல் transformation :

நான் அப்போது திட்டிய அந்த இயக்குனரே இப்போது கோலி சோடா 1.5 படத்தை இயக்கி வருகிறார். அந்த படமும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது என்று கூறி இருந்தார். மேலும், அந்த பேட்டியில் ‘ஏன் நீங்க எந்த பேட்டியும் கொடுக்கவில்லை’ என்று கேட்கப்பட்டது. அதற்கு ‘நான் பார்க்க இப்படி இருக்கேன் இல்ல,நான் Atmதான’ என்று தாழ்வு மனப்பான்மையோடு பேசி இருந்தார். இப்படி ஒரு நிலையில் மேக் அப் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் சீதாவை வேற லெவலில் மாற்றி இருக்கிறார்.

Advertisement