தன் பெயரை பச்சை குத்திய ரசிகர் – வருங்கால மனைவி குறித்து கேலி செய்து சன்னி லியோன் போட்ட பதிவு.

0
753
sunny
- Advertisement -

சன்னி லியோனுக்காக ரசிகர் ஒருவர் செய்திருந்த செயல் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. ஹாலிவுட்டில் பாலியல் ஆபாச படங்களில் நடித்து பின்னர் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக மாறியவர் நடிகை சன்னி லியோன். தற்போது ஹிந்தி திரையுலகின் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு டேனியல் வெபர் என்ற கணவர் இருக்கிறார். ஆபாச நடிகையாக இருந்தாலும் இவரை இந்திய ரசிகர்கள் முன்னணி நடிகையாக ஏற்றுக்கொண்டனர். மேலும், சன்னி லியோன் திருமணம் ஆன பின்னர் இரண்டு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தற்போது இவர் தமிழ், மலையாளம் என்று பல படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
sunny

ஆரம்பத்தில் இவர் பார்ன் எனப்படும் நீலப்படங்களில் நடித்து வந்தார். அதன் பின் இவர் பாலிவுட்டில் அறிமுகமாகி நடிகையாக மாறிவிட்டார். தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் தமிழில் பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதன் பின்னர் வீரமாதேவி என்ற படத்திலும் சன்னி லியோன் நடித்து வருகிறார். இவருக்கென்று உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் இவர் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

- Advertisement -

சன்னி லியோன் நடிக்கும் படங்கள்:

கடந்த ஆண்டு நடிகை சன்னி லியோன் அவர்கள் தமிழில் ஒரு புதிய ஹாரர் காமெடி படத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்டது. இந்த படத்தில் அவருடன் இணைந்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் சதீஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் சதீசுக்கு ஜோடியாக குக் வித் கோமாளி போட்டியாளரும் சீரியல் நடிகையுமான தர்ஷா குப்தா நடிக்க இருக்கிறார். பின் இந்த படம் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், ரசிகர்கள் எல்லோரும் சன்னி லியோன் படத்திற்காக ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

சன்னி லியோன் குறித்து எழுந்த சர்ச்சை:

சமீபத்தில் நடிகை சன்னி லியோனின் மியூசிக் ஆல்பம் ஒன்று வெளியாகி இருந்தது. இந்த பாடல் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. சன்னி லியோன் மற்றும் கனிகா கபூர் ஆகியோர் இணைந்து Madhuban mein Radhika என்ற ஒரு ஆல்பம் பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்கள். இந்த பாடலில் நடிகை சன்னி லியோன் மிக கவர்ச்சிகரமான நடனத்தை ஆடி இருக்கிறார். இந்தப்பாடல் வெளியானதிலிருந்து சோசியல் மீடியாவில் கடுமையான எதிர்ப்பு வந்து கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

சன்னி லியோன் திரைப்பயணம்:

இதனால் ஆபாச நடிகை சன்னி லியோனை கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைதளத்தில் கமெண்ட் பதிவிட்டு இருந்தார்கள். இருந்தாலும் சன்னி லியோன் அவர் வேலையை செய்து கொண்டு வருகிறார். மேலும், இவர் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தார். அதன்பின் இவர் இந்திய சினிமாவில் கிளாமர் நடிகையாக பல படங்களில் வலம் வருகிறார். இந்நிலையில் சன்னிலியோன் ரசிகர் ஒருவர் செய்த செயல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அது என்னவென்றால்,

சன்னி லியோனுக்காக ரசிகர் செய்த செயல்:

ரசிகர் ஒருவர் சன்னி லியோன் பெயரை கையில் பச்சை குத்தி இருக்கிறார். அதை அவர் சன்னி லியோனிடம் காட்டுகிறார். இதை பார்த்து சந்தோஷத்தில் சன்னி லியோன் மிரண்டு போகிறார். பின் அதை வீடியோவாக எடுத்து சன்னிலியோன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, அவருக்கு மனைவி கிடைக்க வாழ்த்துக்கள் “Good luck finding a wife” என்று சன்னி லியோன் கிண்டலாக பதிவிட்டிருக்கிறார். இப்படி சன்னி லியோன் பதிவும், வீடியோவும் சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இதை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement