இதனாலதா பேட்டி கொடுக்கறது இல்ல – கவுண்டமணி சொன்ன பீடி கதை – தலைவர் அந்த காலத்து தல மாதிரி போல.

0
1199
Goundamani
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் நகைச்சுவை மன்னனாக பட்டைய கிளப்பியவர் நடிகர் கவுண்டமணி. இவர் காமெடியில் கொடி கட்டி பறந்தவர். இவர் முதலில் நாடக மேடையில் தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதற்கு பிறகு சினிமாவில் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வந்தார்.இவருடைய காமெடி இருந்தால் தான் அந்த படம் ஹிட்டாகும் என்ற நிலை இருந்தது. சினிமா உலகில் துவக்க காலங்களில் தனியாகத் தான் நகைச்சுவை நடிகராக நடித்தார்.

-விளம்பரம்-

பின் செந்திலுடன் இணைந்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார். இவர் இதுவரை 450 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார்.இவர் படங்களில் நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் வில்லன், குணச்சித்திர நடிகர், நடிகர் என பல வேடங்களில் நடித்து இருந்தார். இன்று (மே 25) கவுண்டமணி தனது 82 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

- Advertisement -

கவுண்டமணி அந்த காலத்து அஜித் என்றாலும் அதற்கு நிகர் இல்லை, காரணம் கவுண்டமணி அப்போதே பேட்டிகளை அதிகம் குடுப்பது இல்லை, மேலும், அப்போதே ரசிகர் மன்றங்களை கூட கலைத்தவர் கவுண்டமணி. இந்த நிலையில் நடிகர் கவுண்டமணி 2.6.1996 அன்று பிரபல பத்திரிகை ஒன்றிற்கு அளித்த ஒரு பேட்டியின் சிறு பின்னூட்டத்தை பார்க்கலாம்.

அந்த பேட்டியில் பேசிய கவுண்டமணியிடம், `ஒரு நடிகன் எப்படியிருக்க வேண்டும்? என்ற கேள்விக்கு பதில் அளித்த போது, பெட்டிக்கடையில பீடியைக்கூடக் கட்டுக்கட்டா உள்ளேதான் வெச்சிருப்பான். அப்போதான் அதுக்கு மரியாதை. அள்ளி வெளியே கொட்டிப் பரத்தி வெச்சு வியாபாரம் பண்ணிப் பாருங்க, பீடி விக்காது. நான் விழாக்கள், பேட்டிகள்னு எதுக்கும் ஒப்புக்கறதில்லே. `கலை நிகழ்ச்சி’ என்ற பேரில் துபாய், சிங்கப்பூர் போறதில்ல. ரசிகர் மன்றங்களையெல்லாம்கூடக் கலைச்சுட்டேன். என் பிறந்தநாள் என்னன்னே மறந்துபோச்சு. முக்கியமா, டி.வி-க்குப் பேட்டி குடுக்கறதில்லை. கவுண்டமணியை சினிமாவுல மட்டும் பாரு, அப்பதான் கிக்

-விளம்பரம்-
Advertisement