தமிழ் சினிமாவில் காமெடி சக்கரவர்த்தியாக திகழ்ந்து வந்தவர் நடிகர் கௌண்டமணி. தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்தாலும் கவுண்டமணி காமெடிகள் தற்போதும் ரசிகர்களால் விரும்பப்படும் வருகிறது. எப்போதும் இவரது காமெடிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக இருந்து கொண்டு தான் வருகிறது.ரஜினி கமல் காலம் தொடங்கி தற்போது நிறைய நடிகர்கள் வரை கவுண்டமணி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் செய்த காமெடிகள் தான் தற்போதுள்ள பல்வேறு காமெடி நடிகர்களின் ரோல் மாடலாக இருந்து வருகிறது.

கடந்த சில காலமாக உடல்நிலை குறைவால் இருந்து வரும் கவுண்டமணி படங்களில் இருந்து நடிப்பதையும் நிறுத்தி விட்டார்.80 காலகட்டங்களில் தொடங்கி 20 காலம் முதல் பல்வேறு படங்களை நடித்துள்ளார் கௌண்டமணி. மேலும், ரஜினி, கமல், விஜய், அஜித் என்று பலர் படங்களில் நடித்துள்ளார். இதில் கமலுடன் சிகப்பு ரோஜாக்கள், 16 வயதினிலே, பேர் சொல்லும் பிள்ளை, இந்தியன், சிங்கார வேலன் என்று படங்களில் கமலுடன் நடித்துள்ளார் கவுண்டமணி.

இதையும் பாருங்க : ஒரு டீச்சர் இப்டி பண்ணிருக்காங்க, அத விட்டுட்டு “இன்ஸ்டிடியூட் அட்டாக் பண்றாங்க” னு பேசுறீங்க, வெக்கமா இல்ல – மதுவந்தியை கிழித்த பெண். அதற்கு அவரின் பதிலை பாருங்க.

Advertisement

இப்படி ஒரு நிலையில் சிங்கார வேலன் படத்தில் நடித்த போது நடிகர் கவுண்டமணிக்கும், கமலுக்கும் ஒரு மனஸ்தாபம் ஏற்பட்டதாக பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள பிஸ்மி, சிங்கார வேலன் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர் ஒருவர் இந்த படத்தில் செந்தில் இல்லையா என்று கவுண்டமணியிடம் கேட்டிருக்கிறார. அதற்கு கவுண்டமணி, இருக்கிறார் வெள்ளை செந்தில் அவர்தான் கமல் என்று கூறியிருக்கிறார். இதனை காதில் கேட்டு உள்ள கமல், கவுண்டமணி மீது மிகுந்த கோபத்தில் ஆழ்ந்துள்ளார்.

இதனால் இளையராஜாவிடம் சொல்லி கவுண்டமணி மன்னிப்பு கேட்டால் தான் நான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று உதயகுமார் இடம் சொல்லி விடுங்கள் என்று கூறியிருக்கிறார் கமல். பின்னர் கவுண்டமணிக்கு இந்த விஷயம் தெரியவர, அடுத்த நாள் ஷூட்டிங்கில் பல மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க கமல் சார் உங்களை வெள்ளை செந்தில் என்று கேலி செய்ததற்கு என்னை மன்னித்துவிடுங்கள் என்று மீண்டும் மீண்டும் சொல்லி இருக்கிறார். உடனே கமலஹாசனும் அட விடுங்க அண்ணே என்று கூறியிருக்கிறார் இவ்வாறு அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார் பிஸ்மி.

Advertisement
Advertisement