நடிகர் கௌண்டமணியா இது.! புகைப்படத்தை பார்த்து ஷாக்காண ரசிகர்கள்.!

0
2116
Goundamani

தமிழ் சினிமாவில் காமெடி சக்கரவர்த்தியாக திகழ்ந்து வந்தவர் நடிகர் கௌண்டமணி. தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்தாலும் கவுண்டமணி காமெடிகள் தற்போதும் ரசிகர்களால் விரும்பப்படும் வருகிறது. எப்போதும் இவரது காமெடிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக இருந்து கொண்டு தான் வருகிறது.

Goundamani Latest Shocking Photo

ரஜினி கமல் காலம் தொடங்கி தற்போது நிறைய நடிகர்கள் வரை கவுண்டமணி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் செய்த காமெடிகள் தான் தற்போதுள்ள பல்வேறு காமெடி நடிகர்களின் ரோல் மாடலாக இருந்து வருகிறது. கடந்த சில காலமாக உடல்நிலை குறைவால் இருந்து வரும் கவுண்டமணி படங்களில் இருந்து நடிப்பதையும் நிறுத்தி விட்டார்.

- Advertisement -

80 காலகட்டங்களில் தொடங்கி 20 காலம் முதல் பல்வேறு படங்களை நடித்துள்ளார் கௌண்டமணி. மேலும் , இவருக்கென்று மூன்று தலைமுறை ரசிகர்களும் இருந்து வருகின்றனர். இறுதியாக 2016 ஆம் ஆண்டு வாய்மை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் கௌண்டமணியின் சமீபத்திய புகைப்படத்தை கண்டு பலரும் ஆதரிசியாகியுள்ள்ளனர்.

Goundamani Latest Shocking Photo

தமிழ் சினிமாவில் டைமிங் காமெடி என்றால் அதற்கு கிரேசி மோகனின் வசனங்களே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தமிழில் பல்வேறு படத்தில் வசனகர்த்தாவாகவும், நடிகருமான பணியாற்றி கிரேசி மோகன் உயிர் பிரிந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரேசி மோகனின் மறைவை அடுத்து பல்வேறு பிரபலங்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். 

-விளம்பரம்-

இன்று கிரேசி மோகனின் இறுதி சடங்கு நடைபெற்றது இதில் திரையுகை சென்ற பல்வேறு நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டு கிரேசி மோகனுக்கு இறுதி அஞ்சலியை தெரிவித்திருந்தனர். இதில் கௌண்டமணியும் கலந்து கொண்டார். தற்போது இவருக்கு 80 வயதாகும் இவர் நேற்று மரணமடைந்த பிரபல நடிகரான கிரேசி மோகனுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி வருகிறது. எப்படி இருந்த மனுஷன் தற்போது இப்படி இருக்காரே என பலரும் வேதனைப்பட்டு வருகின்றனர்.


Advertisement