ஸ்ரீதேவி மரணம் ! கவுண்டமணி ஸ்ரீதேவி பற்றி உருக்கமான பதிவு

0
5004

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 24ஆம் தேதி துபாயில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றிருந்த அவர் தனது ஹோட்டல் அறையில் மாரடைப்பு வந்து இறந்து கிடந்தார்.

sridevi-death

தற்போது அதற்கான விசாரனை நடந்து வருகிறது. மேலும் துபாயில் அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கை தரப்பட்டுள்ளது. இன்று அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக இந்தியா வருகிறது.இந்நிலையில் அவரது மறைவிற்கு பல திரைக்கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் காமெடி சூப்பர்ஸ்டார் நடிகர் கவுண்டமணி ஸ்ரீதேவி மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவி ஒரு திறமையான நடிகை. நாங்கள் இருவரும் ஒரு படம் மட்டுமே நடித்துள்ளோம். அவரது இழப்பு இந்திய சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு. அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவி நாயகியாக நடிகை, வில்லன் கேரக்டரில் கவுண்டமணி நடித்திருப்பார்