நான் காட்சியை கெடுத்துவேன் வேண்டாம் என்றார் சூர்யா. கௌதம் மேனன் சொன்ன ரகசியம்.

0
43065
surya
- Advertisement -

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ்த் திரைப்படம் “வாரணம் ஆயிரம்”. இந்த படத்தில் சூர்யா, சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா, சிம்ரன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் இரட்டை வேடங்களில் நடித்து இருப்பார். வாரணம் ஆயிரம் படத்தில் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையே நிகழும் சுவாரஸ்யமான பல நிகழ்வுகளை அழகாக காட்டி உள்ளார் இயக்குனர் கௌதம் மேனன். இந்த படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் அவர்கள் தயாரித்து உள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளார். இந்த படத்தில் ஒவ்வொரு பாடலும் வேற லெவல்ல ரசிகர்களை கவர்ந்தது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்தது.

-விளம்பரம்-
Image result for gautham menon surya

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் நடிகர் சூரியாவின் திரையுலகப் பயணத்தில் ஒரு மைல்கல் படமாக இந்த படம் அமைந்தது. இந்நிலையில் இந்த படத்தில் சிம்பர் உடன் சேர்ந்து நடிக்க நடிகர் சூர்யா பயந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் 90ஸ் கால கட்டத்தில் ஒட்டு மொத்த ரசிகர்களயும் தனது இடுப்பசையில் வசியம் செய்து வைத்தவர் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் வந்தாலும் நடிகை சிம்ரன் சினிமாவில் பல ஆண்டுகளாக கனவு கன்னியாக திகழ்ந்து வந்தார். தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் இவர் கொடி கட்டி பறந்து வந்தார். சிம்ரன் என்றதும் நம் நினைவில் முதலில் வருவது அவரது நடனம் தான்.

இதையும் பாருங்க : அடையாளம் தெரியாத அளவு வளர்ந்துள்ள அவ்வை ஷண்முகி குழைந்தை நட்சத்திரம்.பிகினி உடைகளில் கொடுத்த போஸ்.

இதனால் சிம்ரனை பலரும் இடுப்பழகி என்று அழைத்து வந்தனர். சிம்ரன் அவர்கள் முதன் முதலில் 1997 ஆம் ஆண்டு பிரபு தேவா மற்றும் அப்பாஸ் நடிப்பில் வெளியான வி ஐ பி என்ற படத்தில் பிரபு தேவாவிற்கு ஜோடியாக சினிமா உலகில் அறிமுகமானார். அதற்கு பிறகு பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து உள்ளார். பின் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் தன்னுடைய நடிப்பு திறனை காண்பித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் 90ஸ் கால கட்டத்தில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகையும் இவர் தான். இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் சமீபத்தில் ஒரு விருது விழா ஒன்றில் கலந்து கொண்டார்.

-விளம்பரம்-
Related image

அந்த விருது விழாவில் நடிகை சிம்ரன் அவர்களும் கலந்து கொண்டார். அந்த விருது விழாவில் கவுதம் மேனன் அவர்கள், நடிகை சிம்ரனுக்கு விருது ஒன்று கொடுத்தார். அப்போது கௌதம் மேனன் அவர்கள் பேசியது, சிம்ரன் உடன் நடிக்க நடிகர் சூர்யா முதலில் பயந்தார். எதற்காக என்றால் சிம்ரன் ஒரு காட்சியில் மிக அருமையாக நடித்து கொண்டிருந்தார். அதை பார்த்து நடிகர் சூர்யா மிரண்டு விட்டார். அப்போது என்னிடம் வந்து எனக்கும், சிம்ரனுக்கும் காம்பினேஷன் காட்சி வைக்காதீர்கள். நான் அவரது நடிப்பு திறமையையும் கொடுத்து விடுவேன் என்று கூறியுள்ளார்.

Advertisement