தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபு  மற்றும் உறுப்பினர்கள் பதவி நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்பைகளுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் அதனை திருப்பி அனுப்பி வைத்துள்ளார். 2021ஆம் ஆண்டு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்ற பணியாற்றி வந்த அவர் ஜூன் 30  அன்று ஒய்வு பெற்றார்.   

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை பரிந்துரைக்க தமிழக அரசு அளித்த தீர்மானத்தை ஆளுநர் ரவி அவர்கள் அதை திருப்பி அனுப்பியுள்ளார். அதில் அவர் நியமனம் தொடர்பாக வெளிபடையாக விளம்பரம் படுத்தப்பட்டதா என்ற கேள்வியும் அவர் எழுப்பியுள்ளார். தமிழக அரசின் பணிக்களுக்கான பணியாளர்களை தேர்வு செய்யும் தலைவர் பதவிக்கு முன்னாள் டி.ஜி.பி சைலேந்திரபாபுவை நியமனம் செய்தது. அதே போல் உறுப்பினர்களின் தொடர்பாகவும் பரிந்துரை செய்யப்பட்டது. அதற்க்கான கோப்புகள் ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்டுளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

Advertisement

தற்போது சைலேந்திர பாபுவிற்கு 61 வயது. அவர் கடந்த வருடம்  30அன்று ஓய்வு பெற்றார். டி.என்.பி.எஸ்.சி தலைவருக்கான வயது உச்ச வரம்பு 62 வயது அல்லது பணியில் 6 ஆண்டுகள் மட்டும். இதனை சுட்டிக்காட்டி அவருக்கு இந்த பதவிக்கு பரிந்துரைக்கப் பட்டது. உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று வெளியான விளம்பரத்தின் வெளிப்படைத்தன்மை ஆகியனவற்றை சுட்டிக் காட்டி ஆளுநர் ஆர்.என். ரவி சில கேள்விகளை எழுப்பியதாகத் தெரிகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 13 உறுப்பினர்களையும் மற்றும் ஒரு தலைவரை கொண்ட ஓர் அமைப்பாகும். இதில் தற்போது தலைவர் பணியிடம் காலியாக இருந்து வருகிறது. அதேபோல டி.என்.பி.எஸ்.சி.,யில் தற்போது 3 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். உறுப்பினர்களில் ஒருவரான முனியநாதன் ஐ.ஏ.எஸ் (ஓய்வு), பொறுப்பு தலைவராகப் பணியாற்றி வருகிறார். இதனால் உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 ஆகக் குறைந்துள்ளது.

Advertisement

இந்நிலையில் சைலேந்திர பாபுவின் நியமனம் தொடர்பாக ஆளுநர் ரவிக்கு அனுப்பி வைக்கபட்டிருந்த கோப்புகளை அவர் திருப்பி அனுப்பிவைத்தார். பல்வேறு காரணக்களை காட்டி ஆளுநர் நியமனம் தொடர்பான அறிவிப்புகளை எப்படி வெளியிட்டீர்கள் என்றும் கேட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் உள்ளன. இருப்பினும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் இதில் பின்பற்றவில்லை என்றும் ஆளுநர் ரவி அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் குறித்து விளம்பரம் செய்யப்பட்டுள்ளதா என்றும் அவர் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனதில் பின்பற்றபட்ட நடவடிக்கைகளையும் பற்றியும் அவர் கேள்வி எழுப்பி கோப்புகளை திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.        

Advertisement