நடிகர்கள் மட்டும் தாத்தா வயதிலும் ஹீரோவாக நடிக்கிறார்கள் என்று பிரபல நடிகை புலம்பல் – புகைப்படம் உள்ளே

0
1311
rima
- Advertisement -

பரத் நடித்த யுவன் யுவதி படத்தில் பரத்திற்கு ஹீரோயினாக நடித்தவர் ரீமா கல்லிங்கள். இவர் கேரளாவை சேர்ந்தவர். கடந்த 2008ஆம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் வென்று பின்னர் நடிப்பிற்கு வந்தார்.

Rima

திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு ரீமா நடிகைகளின் புறக்கணிப்பை பற்றி பேசினார்.

- Advertisement -

நடிககைகள் தங்களது சொந்த வாழ்க்கையில் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அவர்களது சினிமா வாழ்க்கையை பாதிக்கிறது. திருமணம், விவாகரத்து, குழந்தை பெற்றுக்கொள்ளுதல் என அனைத்து விஷயங்களும் அவர்களது சினிமா வாழ்க்கையை பாதிக்கிறது.

ஆனால் நடிகர்கள் அப்படி இல்லை 20 வயது முதல் 70 வயது வரை ஹீரோவாக நடிக்கிறார்கள். அது எனக்கு மகிழ்ச்சி தான். ஆனால் ஒரு நடிகையாக அதற்கு நான் வருந்துகிறேன். ஏனெனில் நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம்.

Rima

பேஸ்புக்கில் போடப்படும் நடிகையின் போட்டோகளில் வந்து அந்த நடிகை என்ன ட்ரெஸ் போட வேண்டும் எப்படி போட வேண்டும் என அறிவுரை கூறுகின்றனர். அனைத்துமே இங்கு தான் ஆரம்பம் ஆகிறது,என பேசினார் ரீமா கல்லிங்கள்.

Advertisement