Saffron கம்பெனி GST இரன்டையும் வேலைக்காரன் படத்தில் கலாய்த்த சிவா ! உள்குத்து இதுதான்

0
2127
- Advertisement -

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் திரைப்படம் நேற்று வெளிவந்து நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சிவாவின் வழக்கமான காமெடி படமாக இல்லாமல், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இது அமைந்துள்ளது.
velaikkaran
ஒரு சர்வதேச கார்ப்பரேட் நிறுவனம் மக்களை எப்படி எல்லாம் தன் நோக்கத்திற்கு பயன்படுத்தி வியாபாரம் செய்கிறது என்பதை தெளிவாக கூறியிருப்பார் மோகன் ராஜா. மேலும் சிவாவின் இந்த படத்திலும் GST குறித்த விமர்சனத்தை காமெடியாக வைத்துள்ளார் மோகன் ராஜா.

-விளம்பரம்-

தனது முதல் மாத சம்பளமாக ₹ 5000 மட்டுமே கொடுத்தான் என சிவாவின் அம்மா ரோகிணி கூறும் போது, மீதத்தை GST கட்டிவிட்டேன் என தனக்கே உரிய பாணியில் GST’யையும் களாய்த்திருப்பார் சிவா.

- Advertisement -

அதே போல, சிவா வேலை செய்யும் கம்பெனியின் பெயர் Safrron என்பதாகும். Safrron என்றால் காவி நிறத்தின் பெயராகும். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவின் கட்சியும் காவி கொள்கையை கொண்ட வலதுசாரி அமைப்பாகும்.
Sivakarthikeyanசிவாவிற்கு ₹ 5000 மட்டுமே சம்பளம் கொடுக்கும் Saffron கம்பெனி GST எடுத்துக்கொண்டது போல அமைந்துள்ளது இந்த காட்சி. இதனால் பலரும் சிவா மத்திய அரசை களாய்த்துவிட்டதாக பதிவிட்டு வருகின்றனர். ஆனால், GST’யை விமர்சிக்கும் இது போன்ற காட்சிகளால் மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக பாஜக அண்ட் கோ இந்த படத்திற்கும் ஒரு எதிர்ப்பினை தெரிவித்து படத்திற்கு இன்னும் ப்ரோமோசன் கொடுங்கள் என்பது போலும், சமூக வலைதளத்தில் பேசி வருகின்றனர்.

Advertisement