புகைப்படத்தில் இருக்கும் இந்த பிக் பாஸ் பிரபலம் யாருனு தெரியுதா.! அடையாளமே தெரியல.!

0
41016
Raiza

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பங்குபெறும் பிரபலங்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் வருவது சகஜமான ஒன்றுதான். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பங்கு பெற்று தற்போது தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர் நடிகைகள் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் புகைப்படத்தில் இருக்கும் இவரும் ஒருவர்.

பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் தனது கல்லூரி காலத்திலேயே மாடலிங் துறையில் இருந்து வந்தார். அதன் பின்னர் 2011ம் ஆண்டு மிஸ் இந்தியா அழகிப் பட்டத்தை வென்றார்.மாடலிங் துறையில் பல ஆண்டுகளாக இருந்து வந்த இவர் அதன் பின்னர் பல்வேறு விளம்பரப் படங்களில் நடித்து வந்தார். பின்னர் இவருக்கு வெட்டி நடிகர் படத்தில் ஒரு குமாஸ்தா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

இதையும் பாருங்க : நான்கு மாதத்திற்கு முன்பே ரகசிய திருமணம்.! முதன் முறையாக புகைப்படத்துடன் வெளியிட்ட சஞ்சீவ்.!

அந்தப் படத்தில் இவர் பெரிதாக கவனிக்கப் படவில்லை என்றாலும் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருடன் போட்டியாளராக கலந்து கொண்ட இளம் நடிகருடன் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது அதன் பின்னர் அம்மனுக்கு ரசிகர் பட்டாளமும் ஏறிவிட்டது.

-விளம்பரம்-

சினிமாவிற்குள் நுழைந்த சில காலத்திலேயே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கதையில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சொல்லப்போனால் நயன்தாராவிற்கு பின்னர் இவ்வளவு விரைவில் லீட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இவருக்கு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மட்டும் இவர் நடித்துள்ள 3 படங்கள் வெளியாக இருக்கிறது.

Advertisement