தமிழ் சினிமா திரைப்படங்களுக்கு நிகராக தற்போது தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்களும் எடுக்கப்பட்டு வருகின்றன. அது மட்டும் இல்லாமல் சினிமா துறையில் உள்ள நடிகர் நடிகைகளின் புகழுக்கு ஏற்றவாறு சீரியல் நடிகர்களும் மக்கள் மனதில் அதிக இடம் பிடித்துள்ளனர். சில காலமாகவே மக்கள் தியேட்டருக்கு சென்று படங்கள் பார்க்கும் ஆர்வம் காட்டுவதை விட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களை பார்ப்பதில் தான் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். அதிலேயேயும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் விஜய் டிவியில் பல பிரபலமான சீரியல் தொடர்கள் ஒளிபரப்பாகின்றன.
அந்தவகையில் சில நாட்களுக்கு முன்னால் முடிவடைந்த ராஜாராணி சீரியல் இளைஞர்களிடமும், பல குடும்பங்களின் மனதில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. ராஜா ராணி சீரியலில் சின்னையாவாக சஞ்சீவும் , செம்பாவாக ஆலியா மானசாவும் நடித்து வந்தார்கள். இவர்களுடன் பல நடிகர்களும் நடித்து வெற்றிகரமாக பல வருடங்களை கடந்து ஓடிய இந்த சீரியல் சில தினங்களுக்கு முன் முடிவடைந்தது.இதனால் பல பேர் வருத்தத்தில் ஆழ்ந்தனர்.
இதையும் பாருங்க : கவின் ஷெரீனை நாமினேட் செய்ததை சொன்ன சேரன்.! இதை மட்டும் ஏன் சொல்லவில்லை கவனிசீங்களா.!
இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது.கடந்த சில மாதங்களுக்கு முன் அவர்களுக்கு பகிரங்கமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விஜய் டிவியிலும் இதுகுறித்து அதிகமாக பேசப்பட்டு வந்தார்கள்.அந்நிலையில் அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தபின் கல்யாணம் குறித்து எந்த தேதியும் அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் தங்கள் திருமணம் குறித்து முதன் முறையாக ரகசியத்தை உடைத்துள்ளார் சஞ்சீவ். இதுகுறித்து பேசியுள்ள அவர், “எங்களுக்கு மே 27ம் தேதியே திருமணம் முடிந்துவிட்டது. ஆல்யா மானசா வீட்டில் எங்கள் காதலுக்கு ஒப்புதல் இல்லை. எவ்வளவோ பேசி பார்த்தோம். வேறு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். அதனால் அவரசமாக திருமணம் செய்துகொண்டோம் மேலும், இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஆல்யா மானஸா கழுத்தில் இஸ்லாம் மதத்தில் அணியும் தாலியும் இருக்கிறது. சஞ்சீவின் நிஜப்பெயர் “syed Azharuddin Buhari” என்பது குறிப்பிடத்தக்கது.