சினிமா உலகில் தலைமுறை தலைமுறையாக வாரிசுகள் படங்களில் நடித்தும், இயக்கியும் வருவது வழக்கமான ஒன்று. அதிலும் பல பிரபலங்கள் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாகவும் உள்ளார்கள். அந்த வகையில் இவர்களும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் தான். அது வேற யாரும் இல்லைங்க. நம்ம நடிகை கீர்த்தி சுரேஷும், கல்யாணி பிரியதர்ஷனும் தான். கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் சிறு வயதில் இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது இதனை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்தும் வருகிறார்கள்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பிரியதர்ஷினி பதிவிட்ட பதிவு

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் பிரியதர்ஷன். இவருடைய மகள் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இயக்குனர் பிரியதர்ஷன் அவர்கள் தமிழ், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் இயக்கி உள்ளார். தற்போது பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் அவர்களும் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதையும் பாருங்க : கொரோனவால் புற்று நோய் சிகிச்சை எடுக்க முடியல சார். ட்வீட் செய்த நபர், உடனடி நடவடிக்கை எடுத்த விஜய பாஸ்கர்.

Advertisement

கல்யாணி பிரியதர்ஷன் முதலில் பாலிவுட் திரைப்படத்தில் துணை தயாரிப்பு வடிவமைப்பாளராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். அதனை தொடர்ந்து துணை கலை இயக்குனராக திரைப்படத்தில் பணி புரிந்தார். பின் தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ‘ஹலோ’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ஹீரோ என்ற படத்திலும் இவர் நடித்து இருந்தார். தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் நடிகை கல்யாணி பிரியதர்ஷனும், கீர்த்தி சுரேஷும் சிறுவயதிலிருந்தே நல்ல நெருங்கிய தோழிகள். இவர்களுடைய குடும்பமும் நீண்டநாள் நெருங்கிய நல் உறவில் உள்ளது.

Advertisement

கடந்த 2018 ஆம் ஆண்டு கூட கீர்த்தி சுரேஷுக்கு நடிகை கல்யாணி பிரியதர்ஷன் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி இருந்தார். அப்போது அவர் சிறுவயதில் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீர்த்தி. நீ இந்த அளவிற்கு சினிமாவில் வளர்ந்து இருப்பதை நினைத்து எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இதையும் பாருங்க : விஜய் மீது முட்டை அடித்துள்ள பிரபல நடிகர். யாருனு நீங்களே பாருங்க.

Advertisement

கடந்த வருடம் நீ நடித்த படங்கள் எல்லாமே சூப்பராக இருந்தது. நீ தேசிய விருது வாங்கியதில் எனக்கு பெருமையாக உள்ளது. நீ தற்போது சினிமாவில் உயர்ந்த இடத்தில் உள்ளார். நீ மேன்மேலும் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும். என்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருந்தார். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இதில் கவனிக்கபட வேண்டிய விஷயம் என்ன வென்றால் இந்த இரண்டு நடிகைகளும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், கல்யாணி பிரியதர்ஷன், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement