கொரோனவால் புற்று நோய் சிகிச்சை எடுக்க முடியல சார். ட்வீட் செய்த நபர், உடனடி நடவடிக்கை எடுத்த விஜய பாஸ்கர்.

0
7141
vijayabaskar
- Advertisement -

கொரோனா வைரஸ் குறித்து தினமும் கேட்கும் செய்திகள் நமக்கு அதிகப்படியான கவலையும்,பயத்தையும் ஏற்படுத்துகிறது. கொரோனா வைரஸினால் உலகமே என்ன செய்வது என்று புரியாமல் ஸ்தம்பித்து போய் உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் எண்ணிக்கை சில தினங்களாக இரு மடங்காக அதிகரித்து உள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவினால் 4778 பேர் பாதிக்கப்பட்டும், 136  பேர் பலியாகியும் உள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

-விளம்பரம்-

தமிழகத்தை பொறுத்து வரை இதுவரை 621 நபருக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். மேலும், இந்த வைரஸ் பாதிப்பால் தமிழக்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்த நோயை கட்டுப்படுத்தும் பணியில் பல ஆயிரம் டாக்டர்கள், நர்ஸுகள், துப்புரவு பணியாளர்கள், காவல் துறை, ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் வரை இரவு பகலாக பாடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்த வரை சுகாதார துறை அமைச்சரான விஜய பாஸ்கர், இந்த கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவ ஆரம்பித்த நாளில் இருந்து பம்பரமாய் சுழன்று வந்தார்.

- Advertisement -

தமிழ்நாட்டு மக்களின் ரசிகராக மாறினார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். மேலும், இவரை மீம் கிரியேட்டரகளும் சமூக வலைதளத்தில் புகழ்ந்து தள்ளிவருகின்றனர். மேலும்,மக்கள் மத்தியிலும் அடடா, இப்படி ஒரு அமைச்சரா என்று புகழாரம் சூட துவங்கினர். அமைச்சர் மட்டுமல்லாமல் இவர் டாக்டர் என்பதால் கொரோனா குறித்து தெளிவான விளக்கங்களை மக்களுக்கு பேட்டிகள் மூலம் கூறி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் விஜயபாஸ்கர். மேலும், பலரின் சந்தேகங்களுக்கு பதிலளிப்பதோடு தற்போது சமூக வலைதளத்தின் மூலம் நோயாளியின் சிகிச்சைக்கு உதவி செய்து இருக்கிறார். சமீபத்தில் ட்விட்டர் வாசி ஒருவர் விஜயபாஸ்கருக்கு ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அதில், புற்றுநோய் நோயாளிகளின் நிலை என்ன ? தற்போது உள்ள அனைத்து மருத்துவ மனைகளும் கீமோதெரபி சிகிச்சையை நிறுத்தி விட்டது. என்னுடைய மனைவி மிகவும் சிரமப்படுகிறார் இதற்கு ஏதாவது உதவி மையம் இருக்கிறதா என்று கேட்டு இருந்தார்.

-விளம்பரம்-

அந்த ட்விட்டர் வாசியின் கேள்விக்கு ஐந்து நிமிடத்தில் விஜயபாஸ்கர் ட்விட்டர் கணக்கில் இருந்து உங்களின் தொடர்பு விவரங்களை பகிருங்கள் என்று பதில் வந்தது .அடுத்த சில மணி நேரத்திலேயே அந்த நபர் மேலும் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில், மதிப்பிற்குரிய விஜயபாஸ்கர் அவர்களே சில நிமிடத்திற்கு முன்பாக தான் உங்களுடைய உதவியாளர் ஸ்ரீநிவாஸன் என்பவர் பேசியிருந்தார். மேலும், திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஏற்பாடு செய்திருக்கிறார். உங்களின் மின்னல் வேக செயலுக்கு மிக்க நன்றி. மக்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பும் அக்கறையும் கண்டு நான் வியந்து விட்டேன் தொடரட்டும் நல்லாட்சி என்று பதிலளித்துள்ளார்.

Advertisement