விஜய் மீது முட்டை அடித்துள்ள பிரபல நடிகர். யாருனு நீங்களே பாருங்க.

0
4780
Vijay

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.

இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. இந்நிலையில் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சில வாரங்களுக்கு முன்பு தான் ஹோட்டல் லீலா அரண்மனையில் கோலாகலமாக நடை பெற்றது. இந்த படத்தில் பல துணை நடிகர்கள் நடிக்கிறார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் பரீட்சயமான நடிகர் மகேந்திரன் இந்த படத்தில் நடிக்கிறார். நடிகர் மகேந்திரன் அவர்கள் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இதையும் பாருங்க : விளக்கு ஏற்றும் செயலை செய்யாதது எனக்கு பெருமையாக தான் இருக்கிறது. ரோகினியின் அதிரடி பதில்

- Advertisement -

இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதற்கு பிறகு கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்துள்ளார். பின் இவருக்கு பெரிதும் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சமீப காலமாக இவருடைய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இவர் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இவர் விஜய் உடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, மின்சாரக் கண்ணா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

பல வருடங்கள் கழித்து மீண்டும் மாஸ்டர் படத்தில் விஜயுடன் இணைந்து மகேந்திரன் நடித்திருக்கிறார். மேலும், இவர் விஜய்யின் தீவிர ரசிகரும் கூட இதனால் சமீபத்தில் நடிகர் மகேந்திரன் தன்னுடைய பெயரை மாஸ்டர் மகேந்திரன் என்று டுவிட்டரில் மாற்றியுள்ளார். இந்த நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர், நீங்க குழந்தை நட்சத்திரமாக இருந்த போது உண்மையாவே விஜய் மீது முட்டை அடித்தீர்களா என்று கேட்டதற்கு, ஆமாம், சின்ன வயசுல என்று பதில் அளித்துள்ளார் மாஸ்டர் மகேந்திரன்.

இதையும் பாருங்க : கழிவறை கூட இல்லாத கிராமத்தில் சிக்கி தவித்துவரும் சீரியல் நடிகை. அவரே வெளியிட்ட வீடியோ.

-விளம்பரம்-

ஏற்கனவே மாஸ்டர் படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருந்த மகேந்திரன், இந்த மாஸ்டர் படம் தான் எனக்கு இன்னிங்ஸ் படம். ஆறு, ஏழு வருடத்திற்கு பிறகு நான் அவரைப் பார்த்தேன். எல்லோருடைய பெயரும் ஆன் போர்ட்டில் இருக்கும் போது என் பெயர் ஏன் வரவில்லை என்று பல முறை கேட்டேண். அதுக்கு லோகேஷ் அண்ணா, எல்லாரும் சொல்றாங்க சொல்றாங்க மட்டும் தான் நீ பார்க்கிராய். ஒரு விஷயத்துல உன்னை மறைகிறேன் என்றால் அதுக்கு பெரிய சர்ப்ரைஸ் ஒன்று உனக்கு காத்திருக்கும் என்று சொன்னார். அதை நான் இசை வெளியிட்டு விழாவில் பார்த்தேன் என்று சொன்னார்.

Advertisement